விஸ்வாசம் படத்தின் மெகா பிளாக்பஸ்டரை கொண்டாடி தீர்த்த அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது "நேர்கொண்ட பார்வை" டிரைலர். 'காத்திருந்தது போதும். இன்று மாலை "நேர்கொண்ட பார்வை" டிரைலர்
 ரிலீசாகிறது என  தயாரிப்பாளர் அறிவித்ததைப் போலவே வெளியிட்டுள்ளார். சற்று முன்பு வெளியான இந்த டிரைலரை ஹேஷ்டாக் போட்டு ட்ரெண்ட் ஆக்கி காலையிலிருந்தே சமூக வலைதளத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் தல ரசிகர்கள்.

சரி டிரைலர் எப்படியிருக்கு? அஜித்தின் தோற்றம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம ஸ்டைலாக இருக்கிறது. கருப்பு கோட்டில் ஸ்டைலும், அழகும்! ப்ப்பா...  கோர்ட்டில் ஷ்ரத்தாவைப் பார்த்து ஆர் யூ வெர்ஜின்? நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியுதா மிஸ் மீரா? அதாவது நீங்க கன்னித் தன்மையோடு இருக்கீங்களா? என தல பேசும் ஸ்டார்டிங் பன்ச் டயலாக்கும்,  வெறித்தனமான வாதமும், அசத்தலான ஆக்ஷன் ஸீனும் கோர்ட்டில் வாதாடும் ஸீன் போதும்... தல ரசிகர்களுக்கு செம தீனி போட்டுள்ளார் சதுரங்க வேட்டை வினோத்.

படத்தில் விறுவிறுப்பாக அமைந்துள்ள கோர்ட் ஸீன் செம மாஸாக இருக்கும் என்ற எதிர்பார்பை உருவாக்கி இருக்கிறார். "ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக  இன்னொர ஏன் அசிங்கப்படுத்துறீங்க? என்ற எண்டிங் பன்ச் செம. ஒரு அசத்தலான ஹாலிவுட் ஹீரோவுக்கான அத்தனை லட்சணங்களும் பொருந்திய நடிகராகத் தெரிகிறார்.

பிங்க் படத்தில் வரும் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப் லுக்கை அசால்ட்டாக தனக்கே உரிய ஸ்டைலிஷான மேனரிஸத்தால் அடிச்சு தூக்கியுள்ளார். அதாவது அந்த படத்தில் எப்போதுமே டல்லாக இருப்பது போல காட்டியிருப்பார்கள். இதுல அஜித் எனர்ஜிட்டிக்காகவும், எமோஷனலாகவும் தெரிகிறார். 

யுவனின் இசை டிரைலரின் டெம்போவை கூட்டுகிறது. மிக அற்புதமான உழைப்பு. நிரவ்ஷாவின் ஒளிப்பதிவும் ஸீன் பை ஸீன் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளது. டிரைலரின் எடிட்டிங் மிக அருமையாக இருக்கிறது. டிரைலரிலேயே காட்டிவிட்டார்கள் இது முழுக்க முழுக்க தல கேம் என . விஸ்வாசம் படத்தில் வெள்ளை வேட்டி சட்டையில் கிராமத்து கெத்து முரட்டு மனுஷனாக மிரட்டிய தூக்குதுரை, இந்த படத்தில் நீதி தேவன் என்ற வக்கீல் கேரக்டரில் செம்ம கேஷுவலாக கலக்கியுள்ளார்.