கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. பின் தமிழில் 'அழுக்கன் அழகனாகிறான் ' என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.  

கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. பின் தமிழில் 'அழுக்கன் அழகனாகிறான் ' என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் இவரை, ரசிகர்ளுக்கு நன்கு தெரியப்படுத்தியது என்றால் அது விஜய் சேதுபதியுடன், இவர் செக்சி போலீசாக நடித்த 'சூது கவ்வும்' திரைப்படம், தான். இந்த படத்தை தொடர்ந்து, என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.மேலும், சுசி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரின் கைவசம், பார்ட்டி, மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் என்கிற இரண்டு தமிழ் படங்கள் உள்ளது. ஒரு சில படைகளில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இவர் சிறுவயதில் இருந்து விடாமல் கடைபிடித்து வரும் பழக்கத்தை முதல் முறையாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சிறுவயதில் இருந்தே தனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினமும் 20 நிமிடங்கள் யோகாவிற்காக செலவிடுகிறேன்.

இது அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது கூட தெளிவான முடிவை எடுக்க உதவுவதாக கூறியுள்ளார். இதை தவிர்த்து, தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.