Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Jana Nayagan Full Movie Twitter Review : நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Jana Nayagan Full Movie Twitter Review
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த படம் ஜனநாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் மமிதா பைஜு, நரேன், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சென்சார் பிரச்சனை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்த ஜனநாயகன் திரைப்படத்தை இன்று திரையரங்கில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்துள்ளனர். அப்படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
ஜனநாயகன் எக்ஸ் தள விமர்சனம்
ஜனநாயகன் ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. எமோஷனல் கனெக்ட் தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். குறிப்பாக மமிதா பைஜு, விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை. அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கூஸ்பம்ஸ் வர வைக்கின்றன. இண்டர்வெல் காட்சி பீக் சினிமா. புஸ்ஸி ஆனந்த் கேமியோ எதிர்பார்க்காத ஒன்று. தளபதி விஜய்க்கு சிறந்த ஃபேர்வெல் படமாக அமைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகள் சூப்பர். படம் முடிந்த பின் வரும் காட்சிகள் தியேட்டரையே சைலண்ட் ஆக்கிவிடும் என பதிவிட்டுள்ளார்.
JANA NAYAGAN REVIEW !!#JanaNayagan is a Surreal Experience
Emotional connect is biggest strength of the film , especially @actorvijay & Mamitha Baiju portions 👌@anirudhofficial Background Score & Songs , GOOSEBUMPS !!!
INTERVAL sequence is PEAK CINEMA ✋🤚
Bussy Anandh… pic.twitter.com/qVVXyL3tRf— Let's X OTT GLOBAL (@LetsXOtt) July 23, 2026
ஜனநாயகன் ட்விட்டர் விமர்சனம்
ஜனநாயகன் படத்தின் முதல் பாதி எண்டர்டெயினிங் ஆகவும், இரண்டாம் பாதி ஓகேவாகவும் உள்ளது. படத்தில் மமிதா பைஜு - விஜய் இடையேயான எமோஷனல் கனெக்ட் நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படத்தின் மற்றொரு பலம் அனிருத்தின் இசை. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே நன்றாக உள்ளது. படத்தின் வில்லன் பாபி தியோல் கதாபாத்திரம் தான் மிகப்பெரிய பின்னடைவு. அவரது காட்சிகளை சற்று குறைத்திருக்கலாம். படத்தில் பிரகாஷ் ராஜுக்கு நல்ல ஸ்கோப் இருக்கிறது. டைட்டில் கார்டு, இண்டர்வெல் மற்றும் போஸ்ட் கிரெடிட் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. தளபதி விஜய்யை கொண்டாட கட்டாயம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் இது என குறிப்பிட்டுள்ளார்.
#JanaNayagan [#ABRatings - 3.25/5]
- An Entertaining first half followed by an, Okish second half 👍
- The biggest Factor which worked in the film was the emotional connection between Thalapathy & Mamitha✨
- The Next strength was Anirudh music, perfectly blended interms of both… pic.twitter.com/XHe7KmfEGD— AmuthaBharathi (@CinemaWithAB) July 23, 2026
ஜனநாயகன் சமூக வலைதள விமர்சனம்
ஜனநாயகன் ஒரு மாஸ் மசாலா படம். இதில் அனைத்தையும் விட, தளபதி விஜய்யின் பிரசன்ஸ் தான் பிரதானமாக தெரிகிறது. படத்தின் இரண்டாம் பாதி அரசியல் ப்ளஸ் ஆக்ஷன் ஜோனில் உள்ளது. தன்னுடைய ரசிகர்களுக்கும், ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் படத்தில் கொடுத்துள்ளார் விஜய். மாஸ் காட்சிகளும், அரசியல் ரெபரன்ஸும் படத்தில் உள்ளன. மமிதா பைஜு - தளபதி விஜய் இடையேயான காட்சிகளும், குட் டச், பேட் டச் காட்சியும் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு நன்கு ஒர்க் அவுட் ஆகும். அனிருத் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. பிளாஷ்பேக் இண்ட்ரோ, ஒரு பேரே வரலாறு பாடல், பாரஸ்ட் எண்ட்ரி மற்றும் சில காட்சிகள் இரண்டாம் பாதியில் ஹைலைட்டாக உள்ளன. பாபிதியோல் காட்சிகள் ஒர்க் ஆகவில்லை. படத்தின் வேகத்தை குறைக்கிறது. அது பின்னடைவாக அமைந்துள்ளது. சில குறைகள் இருந்தாலும் தளபதி ரசிகர்களை திருப்திபடுத்தும் படமாக இது அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
#JanaNayagan Second Half Review 🍿
- A Mass Masala Entertainer where #ThalapathyVijay's presence stands taller than everything else.. The second half moves into a Political + Action zone..✌️
- Thalapathy Vijay makes sure to pack in all the elements for his fans and family… pic.twitter.com/E0J1qHshIh— Laxmi Kanth (@iammoviebuff007) July 23, 2026
நெகடிவ் விமர்சனம்
விஜய்க்கு ஒரு வலிமிகுந்த ஃபேர்வெல் ஆக ஜனநாயகன் அமைந்துள்ளது. சில எலிவேஷன் காட்சிகள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசை தவிர்த்து எதுவும் ஒர்க் ஆகவில்லை. தொய்வான படத்தை கொடுத்திருக்கிறார் எச்.வினோத். படத்தில் அவர் செய்த மாற்றங்கள், குறிப்பாக கிளைக் கதை பழைய ஃபார்முலா போல் உள்ளது. பாபி தியோல் வில்லன் கதாபாத்திரம் மோசம், சில இடங்களில் சிரிப்பு வருகிறது. விஎஃப் எக்ஸ் மற்றும் புரொடக்ஷன் வேல்யூ ரொம்ப சுமார். பகவந்த் கேசரியில் உள்ள முக்கியமான எமோஷனல் காட்சிகள் இதில் உள்ளன. ஆனால் கதையோடு ஒன்றவில்லை. கிளைமாக்ஸ் உங்கள் பொறுமையை சோதிக்கும். மொத்தத்தில் இப்படம் ஏமாற்றம் என பதிவிட்டுள்ளார்.
#JanaNayagan A Painful Farewell for Vijay!
Apart from a few elevation blocks and Anirudh’s score in places, nothing works here. H. Vinoth’s execution is very sloppy, and the changes he made, especially the subplots, feel completely outdated. Bobby Deol’s villain track is…— Venky Reviews (@venkyreviews) July 23, 2026

