Asianet News TamilAsianet News Tamil

உங்கள் விளம்பரத்தை தமிழ்நாடோடு வைத்துக்கொள்ளுங்கள் புதுச்சேரியில் வேண்டாம் - ஆளுநர் தமிழிசை ஆவேசம்!

உங்களுக்கு ஏதாவது விளம்பரம் வேண்டுமென்றால் தமிழ்நாட்டோட வைத்துக் கொள்ளுங்கள் புதுச்சேரியில் வேண்டாம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கூறியுள்ளார். மேலும், விழுப்புரம் எம்பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Keep your protest with Tamil Nadu, not Puducherry - Governor's Tamil obsession!
Author
First Published May 6, 2023, 11:50 AM IST

இந்திய அஞ்சல் துறை சார்பில் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற, கவினைஞர்கள் ஏற்றுமதியாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், புதுச்சேரியில் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கான இரண்டு மணி நேர சலுகை திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்றார். கடுமையாக உழைக்கும் பெண்களுக்கு புதுச்சேரி அரசு அளிக்கும் ஒரு சின்ன பரிசு என்று குறிப்பிட்ட அவர் இந்த திட்டத்தை பல பேர் விமர்சனம் செய்கிறார்கள், ஒருபோதும் இந்த திட்டத்தை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.



ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு முழு சேவையை ஆற்றி வருகிறது, பல்வேறு வெளி மாநிலங்களில் பெறக்கூடிய உயர்நிலை சிகிச்சையை தற்போது ஜிப்மரில் பெற்று வருகிறோம்.

இதையெல்லாம் எதிர்க்கட்சியினர் பாராட்ட மாட்டார்கள், அவர்கள் பாராட்ட தேவையில்லை இருந்தாலும் ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

விழுப்புரம் எம்பி-க்கு புதுச்சேரியில் என்ன வேலை என்று ஆவேசமடைந்த தமிழிசை இவர்களுக்கு விளம்பரம் தேவை என்றால் தமிழ்நாட்டோடு வைத்துக் கொள்ளட்டும் புதுச்சேரியில் தேவையில்லை என்று பொங்கி எழுந்த அவர் போராட்டம் நடத்தும் அளவிற்கு ஜிப்மர் செயல்படவில்லை, ஜிப்மர் நன்றாகவே செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

ஜிப்ரில் ஏழை எளிய மக்களிடம் சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள் அது எந்த விதத்திலும் உண்மையல்ல என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஏழை எளிய மக்களிடம் கட்டண வசூலிக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios