கோடீஸ்வரனாக வாழ்ந்து வாடகை வீட்டுக்கு வந்த போதிலும் வளர்ப்பு நாய்களை கைவிடாத தொழிலதிபர்
கோடீஸ்வரனாக வாழ்ந்து தற்போது குடிசையில் வசிக்கும் அளவிற்கு தொழிலில் நட்டம் அடைந்த நிலையிலும் தான் வளர்த்த நாய்களை கைவிடாமல் பாதுகாத்துவரும் முன்னாள் தொழிலதிபருக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா (வயது 36) பொறியியல் பட்டதாரியான இவர் மும்பையில் வசித்து வந்து வந்தார். விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஆகியவற்றின் பணியாற்றியவர். 13 ஆண்டுகள் ஐடி நிறுவனங்களில் தொழிலதிபராக இருந்துள்ளார். கொரோனா மற்றும் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இவரது தொழில் முடங்கவே இருக்கும் சொற்பத்தொகை மற்றும் தனது இரண்டு வளர்ப்பு நாய்களுடன் இந்தியா வந்தார்.
இந்தியாவில் சிலருக்கு கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்காக அவர் முயன்ற போது கடன் வாங்கியவர்கள் வாங்கிய கடனை கொடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் அலைந்த அலைந்து ஏமாற்றம் அடைந்த அவர் தனது காரில் 9-வளர்ப்பு நாய்களையும் ஏற்றிக்கொண்டு வேலை தேடி புதுச்சேரிக்கு வந்தார்.
டிஐஜி விஜயகுமாரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையோ, பணி சுமையோ காரணம் இல்லை - ஏடிஜிபி விளக்கம்
புதுச்சேரியில் மூன்று மாதங்களாக குறைந்த வாடகையில் இருந்தும் அவர் கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட தன்னார்வலர் ஒருவர் முயற்சியால் கிருஷ்ணா நகரில் குடிசையில் தங்கி இருக்கிறார். தனது வளர்ப்பு நாய்கள் இரண்டு மற்றும் அதன் குட்டிகள் என 9 நாய்களுடன் இவர் வசித்து வருகிறார். தனக்கு உணவுக்கு பணம் இல்லாத நிலையிலும் வளர்ப்பு நாய்களை விடாமல் தன்னிடம் உள்ள சொற்பத்தொகைக்கு நாய்களுக்கு உணவு வைத்து பாதுகாத்து வருகிறார்.
தன்னிடம் உள்ள இரண்டு கார்களை விற்று சொந்த ஊருக்கு நாய்களுடன் சென்று ஏதாவது வேலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் தொடர்புகளை இவர் தொடர்பு கொள்ளவில்லை. வசதியாக இருந்த தான் மிகவும் நொடிந்து குடிசையில் இருந்து கஷ்டப்படுவது அறிந்தால் அவர்கள் கவலைப்படுவார்கள் என்பதை என்பதால் யாருக்கும் தனது நிலையை சொல்லாமல் அவர் இருக்கிறார்.
வளைகாப்பு கொண்டாடிவிட்டு வெளியில் சென்ற கர்ப்பிணி, கணவன் பலி; உறவினர்கள் கதறல்
கஷ்டமான வறுமை காலத்திலும் வளர்ப்பு நாய்களை பாதுகாத்து வரும் அவரை புதுச்சேரி தன்னார்வலர்கள் நேரில் சந்தித்து உதவிகளை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வறுமை காலத்திலும் தனக்கு உணவு இல்லையென்றாலும் தனது ஒன்பது வளர்ப்பு நாய்களுக்கும் உணவு வைத்து பராமரித்து வரும் தொழிலதிபரின் செயல் அனைவரும் மனதிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.