Asianet News TamilAsianet News Tamil

குண்டும் குழியுமான சாலையால் பலியான ஷோபனா.. இனி ஓர் உயிர் கூட பறிபோகக்கூடாது.. கொதிக்கும் ராமதாஸ்.!

சென்னை மதுரவாயல் அருகே புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி விழுந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் மீது சரக்குந்து ஏறி நசுங்கி விழுந்து உயிரிழந்தார்.

Zoho Software engineer shobana dies..ramadoss condolence
Author
First Published Jan 5, 2023, 7:16 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க  தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை மதுரவாயல் அருகே புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி விழுந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் மீது சரக்குந்து ஏறி நசுங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

இதையும் படிங்க;- வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயக்குமார்.. பிளாஷ்பேக்கை சொல்லி அதிமுகவை டேமேஜ் செய்த வழக்கறிஞர் பாலு.!

Zoho Software engineer shobana dies..ramadoss condolence

விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு எந்தத் துறையின் பொறுப்பு? என்பது குறித்த சர்ச்சையில் நீண்டகாலமாக பராமரிக்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ஆம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அரசுத் துறைகளின் அலட்சியம் உயிர்களை பலிவாங்கக்கூடாது.

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றாலும், பருவமழை காரணமாகவும் சென்னையில் பெரும்பான்மையான சாலைகள் பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை.

Zoho Software engineer shobana dies..ramadoss condolence

சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஓர் உயிர் கூட பறிபோகக்கூடாது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க  தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  ஜி.கே.மணியின் மகன் பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ராமதாஸ்.!

Follow Us:
Download App:
  • android
  • ios