மேலும், அதிமுக விற்கும் திமுகவிற்கும் கோவிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய அவர், சாதி மதம் பாராமல் இருப்பவர்களை வைத்து கோவில்களை மீட்டெடுக்க குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
வனத்துறைக்கு சொந்தமான ஒரு இன்ச் நிலத்தை நான் ஆக்கிரமித்ததாக நிரூபித்தால் கூட நாட்டை விட்டு வெளியேற தயார் என சத்குரு ஜக்கிவாசு தேவ் உறுதிப்பட கூறினார். தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கோரி சத்குரு துவங்கி உள்ள கோவில் அடிமை நிறுத்து (FreeTNTemples) இயக்கம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது.
இதில் சத்குரு மற்றும் நடிகர் சந்தானம் கலந்துக்கொண்டு உரையாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்குரு. அனைத்திற்கும் நாட்டில் சட்டம் உள்ளதாகவும், எது செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு முன் அதுக்குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும் என கூறினார் மேலும், அதிமுக விற்கும் திமுகவிற்கும் கோவிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய அவர், சாதி மதம் பாராமல் இருப்பவர்களை வைத்து கோவில்களை மீட்டெடுக்க குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அதிக சர்ச்சைகள் ஈஷா ஆசிரமத்தில் மேல் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு. பதிலளித்த அவர், வாய் பிழப்பிற்காக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பகிரப்பட்டு வருவதாகவும், அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், எனக்கு பின்பும் ஈஷாவை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் தான் கேட்க வேண்டும் என்றும், கட்சிகள் அளிக்க கூடாது எனவும், வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின் தான் வாக்கு அளிக்க வேண்டும், அதனால் தான் கோவில்களை மீட்டெடுப்பது தொடர்பாக தற்போது பேசுவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் மதத்தில் தலையிட கூடாது, மதம் அரசாங்கத்தில் தலையிட கூடாது இதுவே என் கருத்து என கூறிய அவர், சுதந்திர நாட்டில் இதுவே அரசியல் அமைப்பில் இருப்பதாகவும், கோவில்கள் எப்போதும் பூசாரி கைகளில் இல்லை என்றும் அனைத்து தரப்பினரும் கோவில்களில் பூஜை செய்யலாம் எனவும் கூறினார். கோவில்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என கூறிய அவர், கல்வியை உயர்த்த மத்திய, மாநில அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும், தமிழகத்தில் படித்து விட்டு வெளிநாடுகளில் வேலை செய்து வருவதாகவும், என் 5 திட்டங்களில் 3 திட்டங்களையாவது செய்வார்கள் என்று யார் உறுதியளிக்கிறார்களோ அவர்களுக்கே சட்டமன்ற தேர்தலில் என் ஆதரவு எனவும் அவர் கூறினார்.
