ஜெகன் மோகன் ஆந்திராவில் முதலமைச்சராக  பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

அந்த வகையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அவர் மக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு கட்டிடத்தை  இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நேற்று உத்தரவிட்டார். 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இதனிடையே விமான நிலையத்திலிருந்து உள்ளே சென்று விமானம் ஏற அவருக்குத் தனி வாகனமும் அளிக்கப்படவில்லை. அவர்  பொதுமக்களுடன் பேருந்தில் பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது ஆந்திர மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.