ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் மெரீனா உட்பட தமிழகம் முழுவதும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராடியதைப் போல காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகவும் இளைஞர்களும், மாணவர்களும் போராட வேண்டும் என  நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

காவிரி பிரச்சனையில்  இறுதித் தீப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 6 வாரங்களுக்குள் கண்காணிக்க மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதற்கான முயற்சியை எடுக்காமல் 3 மாத அவகாசம் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகமே கொதித்துப் போயுள்ளது, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை , காவிரி விவகாரத்தில் அனைத்து மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக போராட வேண்டும் என்றார்..

ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கில் கூடி மக்கள் எப்படி போராடினார்களோ  அதைப் போல காவிரிக்காவும் போராட வேண்டும் என்றும்.  அதிமுகவுக்கு என்று தனிக்கொள்கை உள்ளது. மக்கள் நலனுக்காக செயல்படும் அரசு அதிமுக அரசு என்றும் தெரிவித்தார்.. 

காவிரி வாரிய விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்தால் ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாரா? என்றும் தப்பிதுரை கேள்வி எழுப்பினார்.

 அரசியலுக்காகவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தில் எங்களுடையை போராட்டம் தொடரும். மாநில அரசு வேறு, மத்திய அரசு வேறு. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தம்பிதுரை குறிப்பிட்டார்..