Young heros criticized Actress Rathika sarath kumar
நடிகர் சங்க தேர்தல் பிரச்னையில் ராதிகா, ராதாரவி மற்றும் விஷாலுக்கு இடையில் மூண்ட சண்டை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரை தொடர்கிறது. நடிகர் சங்க தேர்தலின் போது கார்த்தி உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்களை ட்விட்டரில் வசைபாடி தள்ளிய ராதிகா இப்போது விஷாலை குறிவைத்து குதறிக் கொண்டிருக்கிறார்.
விஷாலின் மனு ஆர்.கே.நகரில் நிராகரிக்கப்பட்ட பின்னரும் ராதிகாவின் ரவுசு அடங்கவில்லை. உண்மையான பச்சோந்தியை மக்கள் பார்ப்பர்! அதுயிதுவென அரற்றிக் கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில் ராதிகாவுக்கு இளம் தலைமுறை நடிக-நடிகைகள் தங்களது கண்டனங்களை நடிகர் சங்க வாயிலாக பதிவு செய்திருக்கின்றனராம். அதில் சிலர் ...’பச்சோந்தித்தனத்தை பற்றி பேச ராதிகாவின் குடும்பத்துக்கே அருகதையில்லை.’ என்று போட்டுத் தாளித்துள்ளனர்.

இதுபற்றி விரிவாக கூறும் நடிகர் சங்க ஊழியர் ஒருவர் “ஆர்.கே.நகரில் போட்டியிட முனைந்த விஷாலை ராதாரவி, ராதிகா இருவரும் வன்மையாக எதிர்த்ததை கண்டித்திருக்கும் இளம் ஹீரோக்கள் இருவர் ’பச்சோந்தித்தனத்தை பற்றி பேச உங்களுக்கெல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது? அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில் பதவிக்காகவும், பணத்துக்காகவும் மாற்றி மாற்றி காவடி தூக்கும் நீங்கள் இதைப்பற்றி பேசலாமா? ‘நான் இறக்கும் போது எனது உடலில் தி.மு.க.வின் கொடிதான் போர்த்தப்பட்டிருக்கும்.’ என்று சொன்ன வார்த்தையின் ஈரம் காய்வதற்குள் பொது தேர்தலில் ரெண்டு சீட்டுக்காக ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர் சரத்குமார்.
சரி அங்கேயாவது நன்றியுடன் இருந்தாரா? என்றால் அதுவுமில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தன்னை கண்டுகொள்ளவில்லை என்பதற்காக அதிருப்தி அறிக்கை வெளியிட்டு, பின் பா.ஜ.க. பக்கம் போவதா அல்லது ஸ்டாலினிடம் பதுங்குவதா என்று அலைபாய்ந்தார். கடைசி நொடியில் ஜெயலலிதா மன்னித்து அழைக்க! கொஞ்சம் கூட யோசிக்காமல் மீண்டும் போய் ஐக்கியமாகி சீட் வாங்கி மிக மோசமாக தோற்றார்.
.jpg)
ராதாரவி செய்யாத தாவல்களா? ஜெயலலிதா இருக்கும் போது அ.தி.மு.க.வின் பேச்சாளராக காசு பார்த்துவிட்டு, அந்தம்மா இறந்த பிறகு மீண்டும் தி.மு.க.வில் ஐக்கியமாகி பொதுக்கூட்டத்தில் பேச இவ்வளவு, தெருமுனையில் பேச இவ்வளவு! என்று பட்டியல் போட்டு பணம் பார்க்கிறார்.
இப்பேர்ப்பட்ட நபர்களின் தங்கையாக, மனைவியாக இருக்கும் நீங்கள் அடுத்தவனை பார்த்து ‘பச்சோந்தி’ என சொல்ல நாக்கு கூசவில்லையா? அ.தி.மு.க.வில் கணவரின் கட்சி கூட்டணி வைத்திருக்க, தி.மு.க.சார்புடைய சன் டி.வி.யில் உங்கள் சீரியலை ஓட்டுவதற்காக நட்பு பாராட்டிய நீங்கள் பச்சோந்தி இல்லாமல் வேறென்ன உயிரினம்?
.jpg)
கேவலம் விளம்பர பணத்துக்காக கோகோ கோலாவை ப்ரமோட் செய்த பேர்வழிதானே நீங்கள்?
சில மாதங்களுக்கு முன் ரெய்டில் உங்கள் வீடு ரெய்டில் சிக்கியது ஏன்? ராடன் நிறுவனத்தை வருமான வரித்துறை வளைத்து நெருக்கியது ஏன்? வருமான வரித்துறை விசாரணைக்கு சரத்குமார் ஓடியது ஏன்? வரி கட்டாமல் எய்த்தது உள்ளிட்ட வேலைகளை நீங்கள் செய்யாமல் இருந்தால் நாட்கணக்கில் உங்களையெல்லாம் வருமானவரித்துறை சுற்றலில் விட்டிருக்காதே!
ஆக உங்கள் குடும்பத்தின் முதுகில் மூட்டை மூட்டையாய் அழுக்கை வைத்துக்கொண்டு, அடுத்தவன் சட்டையிலிருக்கும் தூசியைப் பற்றி பேசாதீங்கள் ராதிகா. உங்கள் தோற்றத்தில் இளமை இருந்தாலும் மனதும், மூளையும் வயதாகிப் போனதற்கான தடுமாற்ற அறிகுறியை காட்ட துவங்கிவிட்டது’ அப்படின்னு பொளந்து கட்டியிருக்காங்க. ” என்கிறார்.
என்ன சித்தி இப்டி கேட்டுப்புட்டானுவ?
