திருச்சி மலைக்கோட்டையில் இளம் கல்லூரி பேராசியியை கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அதிமுக அரசியல் புள்ளி அவரை கடத்தி இருக்கலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

திருச்சி மலைக்கோட்டை நயினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் இந்திரா காந்தி கல்லூரியில் ஆங்கிலதுறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை ஆண்டாள் வீதி பகுதியில் மகாலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்த போது,  ஆம்னி வேனில் காத்திருந்த நபர்கள் பேராசிரியர் மகாலட்சுமியை கடத்திச் சென்றனர். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த வேன் வேகமாக சென்றுவிட்டது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டு  தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 1 மணி நேரம் கழித்து பேராசிரியர் மகாலட்சுமியை கடத்தல் கும்பல் துவரங்குறிச்சி பகுதியில் இறக்கி விட்டு சென்றதாக தகவல் வெளியானது.

இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் மகாலட்சுமியை மீட்டு அழைத்து வந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் வணக்கம் சோமு கடந்த சில மாதங்களாக மகாலட்சுமி செல்லும் இடங்களில் சென்று தகராறு செய்து வந்தாகவும் அவர்  தான் இன்று ஒரு தலைக்காதல் விவகாரத்தால் கடத்தி சென்றதாகவும்,

விவகாரம் கட்டாத்தீ போல் பரவியதால்,  மகாலட்சுமியை இறக்கி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வணக்கம் சோமுவை தேடி வருகின்றனர். கடத்திய வணக்கம் சோமுவுக்கு திருமணமாகி கல்லூரியில் படிக்கும் மகள் உள்ளதாக கூறப்படுகிறது.