Asianet News TamilAsianet News Tamil

அந்த ஆளோட சேர்ந்தெல்லாம் அரசியல் செய்ய முடியாது... மு.க.ஸ்டாலினிடம் சீறிய சின்னசாமி..!

ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. நன்கு பழகக் கூடியவர். ஆனால், கருணாநிதி போல ஆளுமை கிடையாது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படும் நிலையில் உள்ளார். 

You can't do politics with Senthil Balaji ... Little Chinnaswamy to MK Stalin
Author
Tamil Nadu, First Published Mar 24, 2021, 11:02 AM IST

திமுக மாநில விவசாய அணி செயலாளராக இருந்த சின்னசாமி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். 

திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைய என்ன காரணம் என்று அவர் தெரிவித்து இருந்தார். 'திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாகத் திமுகவில் பணியாற்றினேன். சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் தட்டிக்கழிக்கின்றனர். மக்கள் ஆதரவுள்ள எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு ஸ்டாலின் காரணமல்ல. அவருடைய பின்னால் உள்ளோர் தடுக்கின்றனர். அவர் பின்னால் இருக்கும் ஏதோ ஒரு சக்தி அவரை சுயமாகச் செயல்படவிடாமல் தடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.You can't do politics with Senthil Balaji ... Little Chinnaswamy to MK Stalin

அது ஐபேக் இல்லை. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தோர் தடுக்கின்றனர். அவர் வீட்டில் கிச்சன் கேபினட்டும் உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். தற்போது போட்டியிடும் வேட்பாளரைவிட நான் தகுதிக் குறைவாக இருந்தால், நானே வாய்ப்பு கேட்கமாட்டேன். தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக்கழிக்கின்றனர்.

ஒரே ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலினிடமே அரை மணி நேரம் பேசினேன். அவரால் சுயமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. சொந்தமாக முடிவெடுக்க முடியாத நிலையும் உள்ளது. ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. நன்கு பழகக் கூடியவர். ஆனால், கருணாநிதி போல ஆளுமை கிடையாது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படும் நிலையில் உள்ளார். அவரிடம் ஆளுமை இல்லை. எனவே திமுகவை விட்டு விலகுகிறேன்.'’ எனத் தெரிவித்துள்ளார் கரூர் சின்னச்சாமி.You can't do politics with Senthil Balaji ... Little Chinnaswamy to MK Stalin

ஆனால், அவரது விலகலுக்கு திமுகவில் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமே காரணம் என்கிறார்கள். அவர் கட்சியில் இணைந்த 40 நாளிலேயே மாவட்ட செயலாளர் ஆகி விட்டார்.  ஆனால், சின்னசாமி மிகவும் சீனியர். 2019 தேர்தலின்போதே எம்பி சீட் கேட்டார் சின்னசாமி. ஆனால் செந்தில்பாலாஜி, ஜோதிமணி போட்டியிடுவதற்காக காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டார். இதனால் விரக்தி அடைந்த சின்னசாமி, இப்போது, மறுபடியும் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்திருக்கிறார். அதை செந்தில்பாலாஜி தடுத்துவிட்டதாக சொல்கிறார்.You can't do politics with Senthil Balaji ... Little Chinnaswamy to MK Stalin

இதனால் அதிருப்தியான சின்னசாமி, நேர்காணலின்போது மு.க.ஸ்டாலினை சந்தித்து, "செந்தில்பாலாஜியை கட்சிக்கு கூட்டி வந்தவன் நான். அவர் சொல்லி அந்த சீட்டை வாங்க வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. செந்தில் பாலாஜி சீனியர்களை மதிப்பதில்லை. அமமுகவில் இருந்து அவர் பின்னால் வந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். நீங்கள் இதனை யாரிடம் வேண்டுமானாலும் விசாரித்து பாருங்கள்’’எனக் கூறியிருக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் இதனை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. சின்னச்சாமி அதிமுகவில் இணைய முடிவெடுத்துள்ளது தெரிந்து மு.க.ஸ்டாலின் அவரை தொடர்பு கொண்டு போனில் பேசி இருக்கிறார். "எல்லாம் முடிந்து விட்டது செந்தில் பாலாஜியோடு சேர்ந்து என்னால் அரசியல் செய்ய முடியாது" என்று கூறி விட்டாராம். தற்போது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் கரூர் சின்னச்சாமி.  

Follow Us:
Download App:
  • android
  • ios