yogi adithyanath speech

குற்றவாளிகள் சுட்டுக் கொல்லுவோம் !! கூட்டத்தில் பப்ளிக்காக பேசிய முதலமைச்சர் !!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சரா பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் அல்லது போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் முடிந்து யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்றார். அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 325 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அதற்கு முன்பு 2014 பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. தற்போது சட்டசபை தேர்தல் முடிந்து 8 மாதம் கடந்துள்ள நிலையில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. வருகிற 24-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

16 மாநகராட்சி, 198 நகராட்சி, 438 நகர பஞ்சாயத்து ஆகியவை தேர்தலை சந்திக்கின்றன. பாராளுமன்றம் சட்டசபை தேர்தலில் பெற்ற அதே வெற்றியை உள்ளாட்சி தேர்தலிலும் பெறவேண்டும் என்று பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காசியாபாத் நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு யோகி ஆதித்யநாத் பேசினார்.

அப்போது கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு தொழிற்சாலைகள், வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்கள் குற்ற செயல் மற்றும் ஒழுங்கற்ற நிலை ஆகியவற்றால் மாநிலத்தில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டார். ஆனாலும் பாஜக பதவியேற்ற பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை முன்னேறியுள்ளது என தெரிவித்தார்.

தற்போது சட்டம் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்படுவதால் குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் அல்லது அவர்கள் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஒரு பொதுக் கூட்டத்தில் முதலமைச்சரே இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.