யோகா கற்றுக்கொள்ள வந்த வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உல்லாசம் அனுபவித்து மோசடியில் ஈடுபட்ட யோகா மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  சில நேரங்களில் அதில் வெளிநாட்டு பெண்களும் சிக்கிக் கொள்கின்றனர் .  இந்தியா என்றால் கலாச்சாரம் பண்பாடு என வெளிநாட்டினர் கூறிவந்த  காலம் மாறியது தற்போது இந்தியா என்றால் பொய் பித்தலாட்டம் ஏமாற்று பேர்வழிகள் என சொல்லும் அளவிற்குநிலைமை மாறி உள்ளது. 

இந்நிலையிர்  வெளிநாட்டில் இருந்து டெல்லி வந்த பெண்ணை யோகா மாஸ்டர் ஒருவர் ,  ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து அவரிடமிருந்து பணத்தை பறித்துள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .  இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர்  யோகா கற்றுக்கொள்ள டெல்லிக்கு வந்தார் ,  அப்போது  அவருக்கு யோகா கற்றுக் கொடுத்த அபிஷேக் சிங் என்ற யோகா மாஸ்டர் அந்த பெண்ணுடன்  நல்லவர் போல்  பேசியில் அவருக்கு உதவி செய்வது போல் நடித்து,  அவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது .  இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள அந்த பெண் 2018 ஆம் ஆண்டு முதல் யோகா மாஸ்டர் தன்னுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் யோகா பள்ளி ஒன்று ஆரம்பிக்கலாம் என கூறிய அவர் தன்னிடம் இருந்து ஐந்து லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு , தராமல் ஏமாற்று வதாகவும் அந்தப்பெண் தெரிவித்துள்ளார் .

   

இந்நிலையில்  இது குறித்து தெரிவித்த அவரது வழக்கறிஞர் ,   இவரால் ஏமாற்றப்பட்ட வெளிநாட்டு பெண்மணியின  வழக்கு சரியான பாதையிலெ சென்று கொண்டிருக்கிறது  இந்நிலையில் யோகா மாஸ்டரிடமிருந்து அந்த பெண்ணுக்கு இருபத்து நான்கு மணி நேரமும்  பாதுகாப்பு வழங்க வேண்டும் என  டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது .  இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய்  ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அந்தப் பெண்ணுக்கு இலவச சிகிச்சை வழங்க  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .  அந்த பெண்ணின்  விசா அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால் , விசாவை நீட்டிக்க  வெளியுறவுத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது . இந்நிலையில்  யோகா மாஸ்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார் .