உத்தரபிரதேசம் மதுராவில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஏறி தனது சீடர்களுக்கு பிராணயாமம் செய்து கொண்டிருந்த யோகா குரு ராம் தேவ், யானை அசையும்போது, கீழே தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது.

 

 "மதுராவில் உள்ள ஆசிரமத்தில் பாபா ராம்தேவ் யானை மீது ஏறி யோகா செய்து கொண்டிருந்த போது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.மதுராவின் கோகுலில் குரு ஷர்தானந்தா ஆசிரமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் சென்றார். அங்குள்ள மாணவர்கள் மற்றும் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு யோகா பயிற்சியை செய்து காண்பித்தார்.இந்த நிகழ்ச்சி தனியார் தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் யானை மீது ஏறி யோகா செய்யும் நிகழ்வின் போது, எதிர்பாராத விதமாக யானை அசைந்ததால் பாபா ராம்தேவ் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் பாபா ராம்தேவிற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் யோகா குரு ராம் தேவ் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது, சாலையில் விழுந்தார். இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.