கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  நாட்டின் பல்வேறு இடங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில்,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையான், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு யோகாசனங்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் செய்தனர். 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த கல்வியாண்டு முதல் , பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதற்காக 13 ஆயிரம் யோகா ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விரிவாக பேசியிருப்பதாகவும், இதற்காக விரைவில் சிதி ஒதுக்கப்படம் என்றம் அவர் கூறினார்.

மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.