உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே. 
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி. 

*    முதல்வர் எடப்பாடி எங்களிடம் ‘பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில் அந்த துறையின் அமைச்சரை சந்தியுங்கள் என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. என்ன செய்யலாம்?’ என கேட்டார்.
-    ஸ்டாலின்

*    ஸ்ரீதேவியின் சுயசரிதையை நான் படமாக்குகிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. அது முட்டாள்தனமானது. ஸ்ரீதேவி போல் நடிக்க இங்கு யாருக்குமே தகுதியில்லை.
-    ராம்கோபால் வர்மா

*    காவிரி விஷயத்தில் தீர்ப்பு வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகிறது. இன்னும் நான்கு வாரங்கள் உள்ளது. எனவே அவசரப்பட்டு இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. 
-    ஜெயக்குமார்

*    எங்களோடு முன்பு கூட்டணியில் இருந்துவிட்டு, இப்போது எங்களை மதவாத கட்சி என தி.மு.க. சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள். 
-    பொன்.ராதாகிருஷ்ணன். 

*    பாரம்பரியமாக மதவாதத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி இப்போது அந்த கொள்கையை முன்னெடுக்கவில்லை. இது குஜராத் உள்ளிட்ட தேர்தல்களில் பிரதிபலித்தது. 
-    பினராயி விஜயன்

*    முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், பழனியப்பனும், பிள்ளை பிடிப்பவர்கள் போல, ஆளுங்கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களை பிடிக்க அலைகின்றனர். 
-    தங்கமணி

*    கமலை வீட்டிற்கே சென்று சீமான் சந்தித்ததில் எனக்கு உடன்பாடில்லை. சீமான் வீட்டுக்கு கமல் வந்திருந்தால் அவரை வரவேற்றிருக்கலாம். பலரை சந்தித்த கமலை நேரில் சென்று இவர் வாழ்த்த வேண்டிய அவசியமில்லை.
-    வியனரசு

*    காவிரி நீர் விவகாரத்தில் தமிழர்களின் கோரிக்கையை கேட்பதற்கு மோடிக்கு விருப்பமில்லை. காரணம், கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே இப்படி நடந்து கொள்கிறார். 
-    வைகோ

*    மக்கள் பிரச்னைகளை தமிழக அரசு தீர்ப்பதில்லை. வெள்ளம், வறட்சி, புயல் போன்றவற்றில் தமிழகம் பாதிக்கப்பட்ட போது மத்திய அரசிடம் இருந்து அதற்கான சரியான நிவாரண நிதியை தமிழக அரசால் பெற முடியவில்லை. 
-    முத்தரசன்

*    பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணிக்கு தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு அதிக நிதி, கூடுதல் திட்டங்களை பெற முடியும். தினகரனும், அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும். 
-    ராமதாஸ் அத்வாலே

*    அரசியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நரசரி மாணவர் தான். அவரது செயல்பாடுகள் அப்படித்தான் உள்ளன. அமித்ஷா முதுநிலை பட்டம் முடித்த மாணவர்.
-    ஹிமந்தா பிஸ்வா.