yes i am poster boy but who you are mitta or mirasu - rajendhira balaji angry
பால் கலப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போஸ்டர் ஒட்டி குறித்து பேசும் போது ஆவேசமடைந்து நான் போஸ்டர் ஒட்டிதான் நீ என்ன மிட்டா மிராசா என்று கேட்டார்.
ராஜேந்திர பாலாஜி கூலிக்கு பேசுபபவர் என்று வைகை செல்வனை கூறியதற்கு போஸ்டர் ஒட்டி பிழைப்பு நடத்தியவர் என்று ராஜேந்திர பாலாஜியை வைகை செல்வன் கூறினார். இது பற்றி செய்தியாளர்கள் உங்களை சினிமா போஸ்டர் ஒட்டியவர்னு வைகை செல்வன் விமர்சனம் செய்துள்ளாரே என்று கேட்டனர்.
இதை கேட்டு ஆவேசமான ராஜேந்திர பாலாஜி நான் போஸ்டர் ஒட்டியவன் தான் ஆனால் சினிமா போஸ்டர் இல்ல , அதிமுக கட்சி போஸ்டர ஒட்டியவன். நாலு பயலுகள வச்சிகிட்டு வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு ஊர் பூரா கட்சி போஸ்டர் ஒட்டியவன்.
விருது நகர் மட்டுமல்ல பக்கத்து மாவட்டத்திலும் ஒட்டியவன். கட்சியில் அடிமட்டத்திலிருந்து வந்தவன் , விவசாய குடும்பத்துல பிறந்து சாதாரண நிலையிலிருந்து வந்தவன் தான் மிட்டா மிராசெல்லாம் கிடையாது.
இவரு என்ன மோ மிட்டா மிராசு குடும்பத்துல இருந்து வந்தவர் போல பேசுறாரே? நான் போஸ்டர் ஒட்டிதான் இவரு என்ன அதிபரா ? போஸ்டர் ஒட்டின்னா அவ்வளவு கேவலமா? என்ன கஞ்சாவா விக்கிறான் என்று கோபமாக கேட்டார்.
