எடப்பாடியின் ரகசியங்களை அவ்வப்போது தினகரனுக்கு தெரிவித்த, நாம் தமிழர் கட்சி பிரமுகரை, போலீஸ் செமத்தியாக கவனித்தது, தினகரனை படு டென்ஷனாக்கி உள்ளது.

போலீஸ் அடித்தது உங்களை அல்ல, எனக்கு எடப்பாடி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் என்று பாதிக்கப்பட்ட நண்பரிடம் கூறியுள்ளார் தினகரன்.

தேர்தலுக்கு முன்பாக, அந்த விஷயத்தை நீங்கள் வெளியில் சொன்னால், அது ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். அதனால், தேர்தல் முடிந்தவுடன் கூறுங்கள்.

அதையே காரணமாக சொல்லி, இப்படி ஒரு முதல்வரா? என என்னுடைய ஆட்களை பேச வைத்து, அவருக்கு கல்தா கொடுத்து விடுகிறேன் என்று உறுதி அளித்துள்ளாராம் தினகரன்.

எனினும், பாதிக்கப்பட்டவர் மீது வேறு எதுவும் வழக்குகள் பதிவாகி வீடாக கூடாது என்பதற்காக, அவர் தற்போது, தினகரன் ஆட்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்தவுடன், அவர் தினகரனை  நேரடியாக சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், தினகரன் ஜெயித்தால் அவரே முதல்வராகி விடுவார். தோற்றால், வேறு ஒருவர் முதல்வராக வருவார். இதுதான் தினகரனின் திட்டம்.

எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்தவுடன் எடப்பாடிக்கு கல்தா உறுதி என்று மட்டும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

அப்படி நடக்கும் பட்சத்தில், எடப்பாடி  பியூஸ் போன பல்பாக அமைதியாக இருப்பாரா? அல்லது சில எம்.எல்.ஏ க்கள் ஆதரவுடன், ஜெயலலிதா சமாதி சென்று மற்றொரு பன்னீராக முயற்சி எடுப்பாரா? என்பது பதவி பருப்புக்கு பின்னரே தெரிய வரும்.