இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக  ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது .  தென்கிழக்காசிய பசுமை அமைப்பு சுற்றுச்சூழல் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் இந்தியாவில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் , அனல் மின் நிலையங்கள் ,  தொழிற்சாலைகள் ,  நிலக்கரி மற்றும் பெட்ரோலிய  எரி பொருட்களால் உருவாகும்  சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . 

இதன் காரணமாக ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் ஏராளமானோர் உயிரிழந்ததுடன் ,  பலர் நோய்க்கு ஆளாகி வருகின்றனர் .  இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த வகை சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.   அதிக காற்று மாசுபாடு ஆஸ்துமா நோயாளிகளை உருவாக்குவதோடு ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளை ஆஸ்துமா தாக்குகிறது .  இதுமட்டுமல்லாது 9 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு சுற்றுச் சூழல் மாசினால் குறைபிரசவம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.   சுமார் 12 லட்சத்து 85 ஆயிரம் குழந்தைகள் ஆத்துமாவோடும் வாழும் நிலை உள்ளது . 

இதையும் படியுங்க:-  இவ்வளவு சீக்கிரம் காங்கிரஸையும் கழுவி ஊத்திய குஷ்பு...!! டெல்லியில் படுத்ததால் தாறுமாறு விமர்சனம்...!! 

காற்றுமாசு , பல்வேறு நோய்களை உருவாக்குவதுடன் பக்கவாதம் ,  நுரையீரல் ,  புற்றுநோய் ,  போன்றவற்றிற்கு  காரணமாக உள்ளது . பொருளாதார ரீதியாகவும் பல பாதிப்புகளை இது ஏற்படுத்துகிறது .  உலக அளவில் காற்று மாசுபாடு காரணமாக 2.9 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது . இந்தியாவைப் பொருத்தவரை ஆண்டுக்கு 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது .  இதை தவிர்க்க மரபுசாரா எரிபொருள் முறையை அதிக அளவில் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் என தென்கிழக்காசிய பசுமை அமைப்பு தெரிவித்துள்ளது .