10ம் வகுப்பு தேர்வு நடத்துவதில் விடாப்பிடியாக நின்றால் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்று உங்களை களத்தில் சந்திப்போம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’‘எதிர்க்கட்சி அஞ்சுகிறது’ என்றீர். ஆச்சர்யப்பட்டோம். ‘பணக்கார நோய்’ என்றீர். குழம்பினோம். ‘தனித்திரு-விழித்திரு-வீட்டிலிரு’என்றீர். இருந்தோம். ‘3 நாளில் காணாமல் போகும்’என்றீர். காத்திருந்தோம். இன்றோ, கைவிரிப்பது போல் கண்ணீர் கடிதம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது? 

பெற்றோர்-மாணவர்-ஆசிரியர்களின் நலனை கருத்தில்கொண்டு 10ம் வகுப்பு தேர்வை ரத்துசெய்யுங்கள். ‘நடத்தியே தீரவேண்டும்’என்றால் கொரோனா தீவிரம் குறைந்தபிறகு நடத்துங்கள். விடாப்பிடியாக நின்றால் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்று உங்களை களத்தில் சந்திப்போம்’’எனத் தெரிவித்துள்ளார்.