Workers in the transport industry should work in a service-minded manner
போக்குவரத்து துறையில் வேலை பார்ப்பவர்கள் சேவை மனப்பான்மையுடன் வேலை பார்க்க வேண்டும் என கூறி வந்தார் அத்துறையின் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். ஆனால் தற்போது போக்குவரத்தின் இயலாமையை போக்க கட்டணங்களை உயர்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.
ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க போக்குவரத்து துறையில் நிதி இல்லாததால் முழுமையாக உடனே வழங்க முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் காரணம் கூறி வந்தார்.
இதனால் ஊழியர் போராட்டம் நீட்டித்து கொண்டே சென்றது. அப்போது பேசிய அமைச்சர் போக்குவரத்து துறையில் வேலை பார்ப்பவர்கள் சேவை மனப்பான்மையுடன் வேலை பார்க்க வேண்டும் என கூறி வந்தார்.
மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.
இந்நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இதற்கான காரணத்தையும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது பேருந்துகளின் உதிரி பாகங்களின் விலை, டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எது எப்படியோ போக்குவரத்து துறை ஊழியர்களிடம் இன்னும் பேச வேண்டியுள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தியிருப்பது மக்களின் தலையில் தான் கூடுதல் சுமையை தமிழக அரசு வைத்துள்ளது என்பதே நிதர்சன உண்மை.
