worker spot out during handling the power supplier
தூத்துக்குடியில் மின் கம்பத்தில் பழுதுபார்த்த ஊழியர் பரிதாப சாவு
தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே கீரனூரைச் சேர்ந்தவர் முருகேசன். மின் வாரிய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் இன்று மதியம், தூத்துக்குடி சிதம்பர நகர் அருகே திம்மையார் கானியில் ஒரு வீட்டில் மின் தடை ஏற்பட்டதால், அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மின் கம்பத்தில் தொங்கிய முருகேசனின் உடலை உடலை, மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
