பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மோடி அரசு புதுச்சேரி அரசிடம் கற்று கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். காரைக்கால் மாங்கனி திருவிழாவை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு தருவது பற்றி மோடி அரசு புதுச்சேரி அரசிடம் கற்று கொள்ள வேண்டும் என்றார். ஆளுநர் ஆய்வு செய்யும் நோய் புதுச்சேரியில் இருந்து தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது என்று கூறிய அவர், புதுச்சேரியில் முதல்வர் அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் ஆளுநர் ஆய்வு நடத்த கூடாது என்றார். 

புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. 22 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல் தெருிவித்துள்ளார்.