Asianet News TamilAsianet News Tamil

1 ஆண்டாக மிரட்டி கற்பழித்த பாஜக சாமியார்... வீடியோ எடுத்து மிரட்டிய மாணவிக்கு நடந்த திடுக் சம்பவம்..!

என்னை உடல் ரீதியாக உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினார். அதன் பிறகு அவர் எனக்கு செய்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்தேன்’ என அவர் தெரிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது. 
 

women Student arrested for raping BJP leader
Author
India, First Published Sep 25, 2019, 3:41 PM IST

உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்தா மீது ஷாஜன்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கூறினார்.
 
சின்மயானந்தா கல்லூரியில் படித்த தன்னை சாமியார் தவறாக வீடியோ எடுத்து கடந்த 1 ஆண்டாக மிரட்டி கற்பழித்ததாக அந்த மாணவி குற்றம்சாட்டி இருந்தார்.  போலீசாரிடம் அவர் அளித்த  வாக்குமூலத்தில்,  ’’படிப்பிற்காக அவரது உதவி கேட்டு அவரை பார்க்கச் சென்றேன். அவரை நேரில் பார்க்க அழைத்தபோது நானும் மரியாதையாக போய் பார்த்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். பக்கத்தில் உட்காரச் சொன்னார். women Student arrested for raping BJP leader

திடீரென அவரது செல்போனை எடுத்து என்னிடம் கொடுத்து அதில் உள்ள வீடியோவை பார்க்கச் சொன்னார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன்.  நான் நிர்வாணமாக குளிக்கும் வீடியோ இருந்தது.  இந்த வீடியோ வெளியே போககூடாது என்றால், எனக்கு என்ன தேவையோ? அதை நீ நிறைவேற்றணும், இல்லைன்னா இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகும். உன் குடும்பத்தையும் கொன்னுடுவேன் என மிரட்டினார். women Student arrested for raping BJP leader

அவர் என்னை உடல் ரீதியாக உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினார். அதன் பிறகு அவர் எனக்கு செய்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்தேன்’ என அவர் தெரிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது. 

இதற்கிடையே சின்மயானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய சட்டக்கல்லூரி மாணவி மீது பணப்பறிப்பு புகார் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சின்மயானந்தா மீதான பாலியல் புகார் ஆதாரங்களை அழிப்பதற்காக ரூ.5 கோடி கேட்டு அந்த பெண் மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மாணவி ஷாஜன்பூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் சாமியார் மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி இன்று காலை 9.15 மணி அளவில் பணப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது. பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.women Student arrested for raping BJP leader

ஷாஜகான்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் வினித்குமார் முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவியை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். சின்மயானந்தா மீது புகார் கூறிய மாணவியை போலீசார் பலவந்ததாக இழுத்து சென்றதாகவும், செருப்பு கூட அணிய அனுமதிக்கவில்லை. மாணவியை கைது செய்யும்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios