Asianet News TamilAsianet News Tamil

கொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன..! கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..!

கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

With the corona deaths, the negligent deaths of the Tamil Nadu government have increased ..! DMK leader Stalin in turmoil ..!
Author
Tamilnadu, First Published Sep 23, 2020, 7:40 AM IST

 கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

With the corona deaths, the negligent deaths of the Tamil Nadu government have increased ..! DMK leader Stalin in turmoil ..!

இதுதொடர்பாக  அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்...."திருப்பூர் அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகிய இருவரும் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்கள். இவர்களது மரணத்துக்குக் காரணம் ஐசியூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் இவர்களுக்குத் தரப்பட்டு வந்த ஆக்சிஜன் தடைப்பட்டுள்ளது. இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது. உலக விருதை எல்லாம் பெற்றுவிட்டதாக உளறிவரும் எடப்பாடி ஆட்சியின் இலட்சணம் இது!கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன! மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது!இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்கள் பட்டியலில் விடுபட்டு போன மரணங்கள் என்று தமிழக அரசு இடையில் சொருகியது.அதற்கே பல்வேறு தரப்புகளில் அம்புகள் பாய்ந்தது.இதையெல்லாம் ஏதோ காரணங்கள் சொல்லி சமாளித்தார்கள் தமிழக அமைச்சர்கள்.தற்போது மின்வெட்டு தடையால் மூச்சுதிணறி இருவர் இறப்பு என்கிற செய்தி அதிர்ச்சியாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios