மதுக்கடைகள் திறக்கும் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார் என புதுச்சேரி அதிமுகவினர் கருப்பு பலூனை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த போது தமிழகத்தில் டாஸ்டாக் கடை திறப்பதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாஸ்மாக் திறப்பது தொடர்பாகவும் திமுக கூட்டணி கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி நடத்தும் புதுச்சேரியில் ஊரடங்கு முடிவதற்கு முன்பாகவே மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதற்கு திமுகவிடம் இருந்து இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று அதிமுகவின் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதையும் படிங்க;- மர்மமான முறையில் மருத்துவ மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி..!

மதுக்கடை திறக்கும் விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதாகக் கூறியும், அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் தலைமையில் முத்தியால்பேட்டையில் நேற்று கருப்பு பலூன்களை காற்றில் பறக்கவிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க;-  சேலத்தில் அதிர்ச்சி... இன்று திருமணம் நடந்த மணப்பெண்ணுக்கு கொரோனா.. தாலி கட்டியதும் தனிமை..!

 இது தொடர்பாக புதுச்சேரி அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் கூறுகையில்;- தமிழகத்தில் மதுபானக் கடை களை திறந்தபோது, திமுக தலைவர் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார். ஆனால், கூட்டணி தயவால் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் புதுவையில் மதுபானக் கடைகளை திறப்பதில் திமுக நிலைப்பாடு என்ன? என ஒரு வாரத்துக்கு முன்பே அக்கட்சியின் தலைவருக்கு கேள்வி எழுப்பியிருந்தோம். இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். மக்களை ஏமாற்ற நினைத்த திமுகவின் முகத்திரை கிழிந்துள்ளது. திமுகவின் சுயமரியாதை, திமுக தலைவரின் மானம் புதுவையில் காற்றில் பறக்கிறது என அவர் கூறியுள்ளார்.