பொன்னார் அறையை காலிசெய்வாரா..?மாட்டாரா...?
நெருக்கடி கொடுக்கும் ஹெச்.ராஜா...!! ஜெயிக்க போவது யார்..?
தமிழக பாஜக கட்சி அலுலவலகத்தில் தங்குவதற்கான அறை ஒக்கீடு பிரச்சனை ஹெச்.ராஜாவுக்கும் பொன்னாருக்கும் இடையே போர் உச்சத்தை எட்டி தலைமைக்கு கூடுதலான உஷ்ணத்தை கொடுத்திருக்கிறது. கட்சி விதிமுறைக்கு எதிராக பொன்னாருக்கு கட்சி அலுவலகத்தில் அறை ஒதுக்கப்பட்டது தவறு. அப்படியென்றால் எனக்கும் ஒரு அறை ஒதுக்க வேண்டும் என்று போர் கொடி தூக்கி வருகிறார் ஹெச்.ராஜா. இதனால் உடனடியாக கட்சி அலுவலக அறையை காலி செய்ய மேலிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சென்னை பிஜேபி அலுவலகமான கமலாலயத்தில் கட்சித்தலைவர்கள் வந்தால் தங்குவதற்கும், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் தங்குவதற்கும் அறைகள் அமைக்கபட்டிருக்கிறது. கட்சி அமைப்புச் செயலாளர் அங்கேயே தங்கி கட்சிப்பணிகளை கவனிக்க கட்சி விதிகளில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பொன்னார் மாநில செயலாளராக இருந்த போது அவர் ஒரு அறையை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு மத்திய அமைச்சரானார். பிறகு இன்னொரு அறையும் சேர்த்து எடுத்துக்கொண்டார். இவர் மட்டும் தங்குவது இல்லாமல் இவருக்கான பாதுகாப்பு போலீசார், உதவியாளர்கள் என அனைவரும் அங்கேயே தங்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அனைவருக்கான உணவு, டீ செலவு வரைக்கும் கட்சியில் இருந்து செய்ய வேண்டி இருந்தது.
 
பாஜக மேலிடம் பல முறை பொன்னாரை அந்த அறையை காலி செய்ய சொல்லியும் அவர் காலி செய்யவில்லை. தற்போது பொன்னார் எந்த பதவியிலும் இல்லை. இந்த நேரத்திலும் கட்சி அலுவலகத்தில் இருக்கும் அறையை பயன்படுத்தி வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பு இல்லாத பொன்னாருக்கு அறை ஒதுக்கும் போது எனக்கு ஏன் அறை ஒதுக்க கூடாது என்று கட்சிக்குள் கேள்வி எழுப்பி வருகிறார் ராஜா.
புதிய மாநில தலைவர் நியமிக்கப்படும் போது அவருக்கு அறை ஒதுக்க வேண்டும் என்பதால் அறையை விட்டு காலி செய்யும் படி பொன்னாருக்கு உத்தரவிட்டிருக்கிறது கட்சி மேலிடம் என்கிறார்கள் பாஜவினர்.

கட்சி மேலிடம் சொல்லியும் அறையை காலிசெய்ய மறுத்து வருகிறார் பொன்னார். அவர் அறையை காலிசெய்யாவிட்டால் வலுக்கட்டாயமாக அந்த அறையை காலிசெய்யவும் திட்டம் இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
பொன்னார் ராஜா மோதல் இன்று நேற்றல்ல: அது பல வருடங்களாகவே மோதல் முற்றிப்போய் இருக்கிறது. இருவருமே ஒருத்தர் மீது ஒருத்தர் கட்சி தலைமைக்கு புகார் கொடுத்தக்கொண்டே இருக்கிறார்கள். பொன்னார் மத்திய அமைச்சராக இருந்த  டெல்லி லாபி எடுபட்டது. தற்போது அவர் எந்த பதவியும் இல்லாமல் இருப்பது அவருக்கு தர்ம சங்கடமாக இருக்கிறதாம்.

எனவே கமலாலயத்தில் இருந்து நான் வெளியேற மாட்டேன் என அடம்பிடித்து வருகிறார் பொன்னார்.மீண்டும் மாநில செயலாளராக நானே வருவேன் என்று கட்சி நிர்வாகிகளிடம் சொல்லிவரும் பொன்னார். அதற்கான வேலைகளை டெல்லி லாபியில் மூலம் காய்நகர்த்தி வருகிறாராம் பொன்னார்.
எது எப்படியோ அறையை விட்டு பொன்னார் போவாரா? இல்லையா? அதுதான் இன்றைய ஹாட்.

T Balamurukan