ராமருக்கு 450 கோடியில் சிலை வைக்கிறார்கள். இதில் 4000 வெண்டிலேட்டரும், 4 மருத்துவமனையும் கட்டயிருக்க முடியும் என மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2500 ஆக அதிகரித்துள்ள நிலையில் உலக வங்கி கரோனா வைரசை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர்கள் தொகையை அவசரகால நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதற்கு கடும் விமர்சமனம் தெரிவித்துள்ளார் மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி. இதுகுறித்து அவர் தந்து ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழன் கொடுத்த வரிப்பணத்தை இந்தி மாநிலங்களுக்கு பங்கிட்டு கொடுத்து என்ன செய்கிறார்கள் சங்கிகள்? ராமருக்கு 450 கோடியில் சிலை வைக்கிறார்கள். இதில் 4000 வெண்டிலேட்டரும், 4 மருத்துவமனையும் கட்டயிருக்கமுடியும். நம்மிடமிருந்து வரியை பிடுங்கவே 'பாரத் மாதா கீ' கோசமெல்லாம் போடுகிறார்கள்.

 

இந்தியாவிற்கு 1பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொரோனா தொடர்பான விசயங்களுக்காக கடன் தருகிறது உலக வங்கி. உ.பி., அரசாங்கம் 450கோடி ரூபாயை அயோத்தியாவில் 221 அடி உயர ராமர் சிலை அமைக்க ஒதுக்கியுள்ளது. அரசுகளுக்கு எது முக்கியம் என்று புரிகிறதா மக்களே? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.