Asianet News TamilAsianet News Tamil

பொது ஊரடங்கு நீடிக்கப்படுமா..? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை.!

தமிழகத்தில் பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா..? அல்லது தளர்த்தலாமா..? என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
 
Will the general curfew be extended? Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy serious advice.!
Author
Tamilnadu, First Published Sep 29, 2020, 8:44 AM IST

தமிழகத்தில் பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா..? அல்லது தளர்த்தலாமா..? என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Will the general curfew be extended? Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy serious advice.!

தமிழகத்தில் பொது ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் உள்ளது. நாளை மறுநாளோடு பொது ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் பொது ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.திரையரங்குகள், நீச்சல் குளம் போன்றவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமணத்தில் 50 பேர்; இறுதி சடங்கில் 25 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்பது உட்பட சில கட்டுப்பாடுகளும் உள்ளன.சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்தபடி உள்ளது. எனவே பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 10:00 மணிக்கு தலைமை செயலகத்தில்'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.மதியம் 3:00 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

Follow Us:
Download App:
  • android
  • ios