Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக எங்கள் காரை மறைப்பதா..? நீதிபதி செம்ம காட்டம்..!

நடிகர் சிவாஜிகணேசனின் 96-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 

Will the Chief Minister cover our car for MK Stalin ..? Judge Semma shows ..!
Author
Tamil Nadu, First Published Oct 2, 2021, 5:50 PM IST

நடிகர் சிவாஜிகணேசனின் 96-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் வருகையையொட்டி, அடையாறு பகுதியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்தனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேசின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனால் நீதிமன்றத்துக்கு அவர் வர தாமதமானது. இதுதொடர்பாக, கண்டனம் தெரிவித்த நீதிபதி, தமிழக உள்துறை செயலாளர் ஆன்லைன் வாயிலாக பிற்பகலில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.Will the Chief Minister cover our car for MK Stalin ..? Judge Semma shows ..!

அதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்கு தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் உயர் நீதிமன்றத்தில் ஆன்லைனில் ஆஜரானார். போக்குவரத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழக உள்துறை செயலாளரிடம் பல கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்ச்சி குறித்து காலை 9.30 மணிக்குத்தான் தகவல் தெரியவந்தது. அதையடுத்து. உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டு, காலையில் உயர் நீதிமன்றத்துக்கு செல்லும்போது வாகனத்தை நிறுத்தவேண்டாம் என உதவியாளர் மூலம் தகவல் தெரிவித்துவிட்டேன். இந்த நிலையில் என்னுடைய கார் மறிக்கப்பட்டது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இரும்பு தடுப்புகள் பலவற்றை வைத்து சாலை மறிக்கப்பட்டிருந்தது. இதனால் 25 நிமிடங்கள் காலதாமதமாக உயர் நீதிமன்றத்துக்கு வந்தேன். பொது ஊழியரான என்னை பணி செய்யவிடாமல் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒரு நீதிபதியின் வாகனத்தை மறித்தது போல, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கார்களை போலீசார் மறிப்பபர்களா? ஏற்கனவே தகவல் தெரிவித்தும் உயர் நீதிமன்ற நீதிபதியின் காரை தடுத்த இந்தச் செயல், நீதிமன்ற அவமதிப்பு செயல். இதற்காக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதை நான் விரும்பவில்லை.Will the Chief Minister cover our car for MK Stalin ..? Judge Semma shows ..!

உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் பலத்தைக் காட்ட உங்களை ஆஜராக சொல்லவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக யார் மீதும் குற்றம்சாட்டவும் விரும்பவில்லை. இதுபோன்ற செயல் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதற்கான ஒரு செய்தியாகவே இதை பதிவு செய்ய விரும்புகின்றேன். முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதுபோலவே நீதிபதிகளையும் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.

நீதிபதியின் கேள்விகளை உள்வாங்கிக் கொண்ட உள்துறை செயலாளர் பிரபாகர், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனருடன் கலந்தாலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  

Follow Us:
Download App:
  • android
  • ios