அதிமுகவுடன் இந்த தேர்தலுக்கு கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என விஜயகாந்த்  நாளை இறுதி முடிவு எடுக்க உள்ளார்.  
 
வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக ஏற்கனவே தனது தேர்தல் பரப்புரையை துவங்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் 100 நாள் பரப்புரையில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். ஆனால், தேமுதிக அந்தக் கூட்டணியில் தொடருமா? என கேள்வி எழுந்துள்ளது. எனவே, நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
 
இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். இதில், வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என முடிவு எடுக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.