Will restore the party and the symbol
முடக்கப்பட்ட கட்சியையும், சின்னத்தையும் மீட்போம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
\முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபிறகு சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். சின்னம் தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தினகரன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இரு அணிகளும் தங்கள் தரப்பு கூடுதல் ஆவணங்களை இன்று (செப். 29) தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனை அடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி. சண்முகம் மற்றும் மைத்ரேயன் எம்.பி., கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று டெல்லி வந்துள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், முடக்கப்பட்ட கட்சியையும், சின்னத்தையும் மீட்போம் என்று கூறினார்.
