இந்த ஃபைல்களை எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் கிளம்பி விடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் அந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை, அந்த ஃபைல்கள் எல்லாம் இருந்தது போயஸ்கார்டனில் இருந்தது.
போயஸ்கார்டனில் இருந்த ஃபைல்களை கோடநாட்டில் தேடியதால் தான் அங்கு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கொடநாட்டில் போய் அந்த வாட்ச் மேனை வாயை கட்டி, ஜன்னலை உடைத்து, பணம் இல்லை வெறும் பைலை மட்டும் தேடி இருக்கிறார். அம்மாவின் ஆட்சிக்காலத்தில் ஸ்பெஷல் பிரான்சில் இருந்து டிஜிபி உளவுத்துறையிலிருந்து வரக்கூடிய ஃபைல்கள் எல்லாவற்றையும் மாவட்ட செயலாளர்கள், மந்திரிகளை பற்றி அம்மா கேட்டதன் பெயரில் பச்சைக் கவர்களில் வரும். அவற்றையெல்லாம் போட்டு எல்லாம் போயஸ்கார்டனில் இருந்து நான் நிறைய கிழித்து போட்டு இருக்கிறேன். என்னுடன் டாக்டர் வெங்ஜ்கடேசன் இருந்து கிழித்து போட்டு இருக்கிறார். பழைய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் அவர்களின் வாழ்க்கையில் சிலவற்றை செய்திருக்கிறார்கள்.

அதை வைத்து நாங்கள் பிளாக்மெயில் செய்ய மாட்டோம். நாங்கள் சாட்டையோ, சவுக்கோ கிடையாது. அதை எல்லாம் உட்கார்ந்து எங்கள் சித்தி சசிகலா சொன்னதின் பெயரில் அதையெல்லாம் படித்து பார்த்து, சிரித்து விட்டு எல்லாவற்றையும் கொளுத்திப் போட்டு விட்டோம். அதில் பல பெயரின் வண்டவாளங்கள் எல்லாம் இருந்தது. அதேபோல கொடநாட்டிலும் இருக்கும் என்று யாரோ எடப்பாடி பழனிச்சாமி இடம் பொய் சொல்லி இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் நான் டெல்லியில் விசாரணைக்காக உட்கார்ந்து இருக்கிறேன். என்னை இரட்டை இலைக்கு காசு கொடுத்ததாக கூறப்படும் என்ற வழக்கில் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு தான் கோடநாடு கொலை சம்பவம் நடந்தது. அவர்கள் அங்கு சென்று கூர்க்கவை கட்டிப்போட்டு, ஜன்னலை உடைத்து, அந்த கொலை நடந்தது. கொடநாடு வழக்கு யார் ஆட்சியில் நடந்தது? அந்த சூழ்நிலையை பாருங்கள், எங்கள் சித்தி சசிகலா ஜெயிலில் இருக்கிறார். நான் வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்று விட்டேன்.

என்னை கட்சியை விட்டு நீக்கியதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் அதிகமாகிவிட்டது. இந்த ஃபைல்களை எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் கிளம்பி விடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் அந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை, அந்த ஃபைல்கள் எல்லாம் இருந்தது போயஸ்கார்டனில் இருந்தது. எங்களுக்கு அந்த ஃபைல்களை எல்லாம் வைத்து பயமுறுத்த வேண்டும் என்று கேவலமான புத்தி எல்லாம் இல்லை. அதனால் அதற்கு முன்பு கிழித்து போட்டு விட்டோம். பாவம் எடப்பாடி பழனிச்சாமி இதையெல்லாம் கொடநாட்டில் போய் தேடி இருக்கிறார். என்றைக்குமே எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி.தினகரன் தான் சிம்ம சொப்பனம். ஏனென்றால் துரோகத்தை வீழ்த்தாமல் நான் ஓயமாட்டேன். யார் எடுத்தாலும் கேட்க மாட்டேன்’’ எனக்கூறியுள்ளார்.
