உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு நம்முடன் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டாகவே உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திய கொரோனா வைரசினை நாம் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. இதற்கிடையில் அதன் இரண்டாவது அலையாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவ தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொரோனா நம்முடன் தொடர்பில் இருக்கும் என பைசர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் உகுர் சகின் தெரிவித்துள்ளார். அதாவது திடீரென சமூகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இதன் தாக்குதல் இருந்து கொண்டே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக மீண்டும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நாம் வாழ்க்கைக்கான புதிய வரையறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என  உகுர் சகின் ஆலோசனை தெரிவித்துள்ளார்.