Asianet News TamilAsianet News Tamil

கொரோனா காலத்தில் தேர்தல் நடக்குமா...? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பாக தொடரும் ஆலோசனைகள்..!

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட உள்ளது.

Will Election conduct in Corona period?
Author
Delhi, First Published Aug 19, 2020, 8:16 AM IST

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல பீகாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதனையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைத்தேர்தல்கள் செப்டம்பர் 7 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Will Election conduct in Corona period?
இந்நிலையில் கொரோனா காலத்தில் தேர்தலை பாதுக்காப்பாக  நடத்துவது, எப்படி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது போன்ற விவரங்களை ஆலோசனைகளாக வழங்கும்படி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதேபோல மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது இதுதொடர்பாக பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது.Will Election conduct in Corona period?
இக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் வழங்கிய ஆலோசனைகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பாதுகாப்பாக தேர்தல்களை நடத்துவது தொடர்பாக வழிமுறைகள் வகுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த வழிகாட்டு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் இன்னும் சில தினங்களில் வெளியிட உள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளைப் பொறுத்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கவும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios