நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இந்த முறையும் கோட்டை விட்டுவிட்டது. 

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தலைவராக இருப்பவர், மத்திய அமைச்சருக்கு நிகராகக் கருதப்படக் கூடியவர். நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியின் நாடாளுமன்றத் தலைவருக்கே இந்த அந்தஸ்து அளிக்கப்படும்.

அதன்படி, காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதால், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற காங்கிரஸ் கட்சி தவறி உள்ளது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, 44 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வென்றது. இதனால், பிரதான நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற அக்கட்சி தவறியது. இந்நிலையில், இரண்டாவது முறையாக அக்கட்சி, பிரதான நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற அக்கட்சி தவறியுள்ளது.