நவம்பர் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து 12ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா  ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம் தேதி மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா தொற்றுப் பரவல் முற்றிலும் ஒழியாத நிலையில், பள்ளிகளைத் திறக்க பெற்றோர் மற்றும் அரிசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், ஆசிரியா் கழக நிா்வாகிகள், பெற்றோா், தனியாா் பள்ளிகள் நிர்வாகம் ஆகியோரின் கருத்துகளைக் கேட்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இன்று கருத்துக் கேட்கப்படும் நிலையில் கல்லூரிகள் திறப்பு பற்றி கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்;- தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு குறித்து 12ம் தேதி அறிவிக்கப்படும்.  வரும் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.