ஒரே ஆண்டில் முறைகேடாக ரூ.30,000 கோடி.. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்பாரா.? அண்ணாமலை கேள்வி

திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்பாரா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Will Chief Minister Stalin take responsibility.? Annamalai question

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. மேலும் கடந்த 14-ம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டதுடன், அது தொடர்பாக தொடர்ச்சியாக கேள்விகளையும் எழுப்பி வருகிறார்.. இந்நிலையில் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ உதயநிதி ஸ்டாலின், சபரீசன் இருவரும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்துள்ளனர் என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தோம். நாங்கள் இந்த மாதம் 14-ம் தேதி வெளியிட்ட DMK Files என்ற காணொளிக்கு வலு சேர்க்கும் விதமாக நிதி தமிழக அமைச்சரின் இந்த பேச்சு அமைந்துள்ளது. இப்போது வரை அதற்கு திமுக அரசு, எந்தவித விளக்கமும் அளிக்காமல் மௌனமாக இருப்பது, அவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர வேண்டும். 

கோவை குண்டுவெடிப்பு சம்பவம், ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைபடை தாக்குதல் என்பதை முதல் நாளில் இருந்து தமிழக பாஜக கட்சி சொல்லி வந்ததை நேற்று மீண்டும் ஒருமுறை தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. இதை இன்று வரை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று மக்களை ஏமாற்றி வருகிறது திமுக. திமுகவினரின் ஆட்சி அதிகார மமதையால் தினந்தோறும் மக்கள் அவதிப்படுகின்றனர்.. ஒருபுறம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மறுபுறம், முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரே ஆண்டில் 30,000 கோடி முறைகேடாக சம்பாதித்திருப்பது என இந்த ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர் எதிராகவும், மக்கள் விரோதமாகவும் செயல்பட்டு வருவதை இனியும் அனுமதிக்க முடியாது..

ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தாரின் இந்த செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று, மக்களுக்கு பதிலளிப்பதோடு, தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

இதையும் படிங்க : என்னது.. ஒரு ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை ரூ.90 லட்சமா..? வேட்பு மனுவில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios