தன்னை சந்திக்க வந்த செங்கோட்டையனை திருப்பி அனுப்பிய எடப்பாடியார்.. என்ன காரணம் தெரியுமா?
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால், அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்திக்கொண்டார்.
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால், அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 11ம் தேதி பொதுக்குழு நடத்தப்படும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் எங்களை மீறி எப்படி பொதுக்குழு நடைபெறுகிறது என்பதை பார்த்து விடலாம் என்ற நோக்கத்தோடு பல்வேறு வழிகளில் இபிஎஸ் தரப்புக்கு ஓபிஎஸ் தரப்பினர் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க;- எடப்பாடி பழனிச்சாமி மனைவிக்கு கொரோனா..!! அதிர்ச்சியில் இபிஎஸ் தொண்டர்கள்.
இதையும் படிங்க;- ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.. எடப்பாடியாருக்கு எதிராக புதிய அஸ்திரம்..!
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறியே இருப்பதால் அவர் தன்னை சேலத்தில் உள்ள வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று மதியத்திற்கு மேல் அவரை சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்திக்கொண்டு, ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க;- எடப்பாடியாருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் சபாநாயகர் தனபால், கடம்பூர் ராஜூ..!
மேலும், தன்னை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் சந்திக்காமல் எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.