புலி ஏன் புல் தின்கிறது என்ற கேள்விக்கு திமுக சட்டமன்ற உறுப்பினரும் டிஆர் பாலுவின் மகனுமான டிஆர்பி.ராஜா சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.அவரின் விளக்கம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது

புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்ற டயலாக்கை நம்மில் பலர் அடிக்கடி சொல்வதை கேட்டிருப்போம், சில நெருக்கடி நேரங்களில் நம்மில் பலர் அந்த டயலாக்கை உபயோகப் படுத்தியிருக்கலாம் , ஆம்...என்னதான் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும்  தன்மானத்தை விட்டுகொடுக்காமல் வாழ்வேன் என்பதன் உவமை சொல்தான் அது. அதாவது, புலி என்னதான் சாப்பிட உணவின்றி பசியில் வாடினாலும் அது  புல்லையோ தழையையோ சாப்பிடாது என்பதை முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்துள்ளனர். இந்நிலையில் வயிறு ஒட்டிப்போய் பசியின் உச்சத்தில் இருக்கும்  புலி ஒன்று புல்லை மேய்வதுபோன்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

இந்த காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருவதுடன், பலர் அந்த வீடியோவிற்கு பல விதங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் இது கிராபிக்ஸ் செய்து உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து கருத்து பதிவிட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, புலி புல் சாப்பிடாது என்று சொல்லப்பட்டாலும் கூட , புலி தன் வயிற்றில் செரிமானமாகாத உணவுப்பொருட்களை வெளியேற்ற புல்லை சாப்பிடுவது வழக்கம் என்று விளக்கம் அளித்துள்ளார்.  அவரின் இந்த கருத்து பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்  அட பரவாயில்லையே நம்ம எம்எல்ஏ சாருக்கு இவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறதே என்று அவரை பாராட்டிவருகின்றனர்.