Asianet News TamilAsianet News Tamil

#BREAKING டாஸ்மாக் திறப்பு ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!

முழு ஊரடங்கால் பரவல் மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது. 60 ஆயிரத்தை தொடும் என்றார்கள். அதனை தடுத்துள்ளோம்.

Why Tasmac Opening? CM MK Stalin explanation
Author
Salem, First Published Jun 12, 2021, 12:58 PM IST

 நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது. 60 ஆயிரத்தை தொடும் என்றார்கள். அதனை தடுத்துள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து,  முதல்வர் பேசுகையில்;-  மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டிருக்கும் தண்ணீர், கடைமடை வரை செல்வதை  உறுதி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 நீர்நிலைகளை துர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Why Tasmac Opening? CM MK Stalin explanation

காவிரியில் தடையின்றி தண்ணீரை பெற மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளேன். குறுவை சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே அரசின் நோக்கம். இதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி உணவுத் துறையில் தமிழகம் சாதனை படைக்கும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.  மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறப்பதில் உறுதியாக உள்ளோம். திருச்சி மாநாட்டில் உறுதி அளித்தபடி வேளாண் துறைக்கு திமுக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அனைவருக்கும் உயர்கல்வி, மருத்துவம் என்ற இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளோம். 

முழு ஊரடங்கால் பரவல் மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது. 60 ஆயிரத்தை தொடும் என்றார்கள். அதனை தடுத்துள்ளோம். மாவட்டங்களில் பரவல் குறைந்துள்ளது. கொரோனா பரவல் முற்றிலும் தடுக்க ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா குறைந்ததாலும்,  ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதன் காரணமாக டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

Why Tasmac Opening? CM MK Stalin explanation

தமிழகத்திற்கு அதிக தடுப்பூசி வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்துக்கு தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். பிரதமர் மோடியைச் சந்திக்க ஜூன் 17-ம் தேதி நேரம் கேட்டுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios