Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் சோனியா தலைவரானது ஏன்..? ராகுல், பிரியங்கா தலைவராகும் வரை சோனியாவே தலைவர்?

தலைவரை தேர்வு செய்வதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் தவித்த வேளையில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த  தலைவர்கள் சோனியாவை பொறுப்பை ஏற்கும்படி வற்புத்தியதகாகக் கூறப்படுகிறது. கடந்த 1998-ம் ஆண்டில் இக்கட்டாண வேளையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா முன்வந்ததைப்போல இப்போதும் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
 

Why sonia gandhi accepted for congress president post?
Author
Delhi, First Published Aug 12, 2019, 8:03 AM IST

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்றது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Why sonia gandhi accepted for congress president post?
 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பதவி விலகுவதில் அவர் உறுதியாக இருந்ததால், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமலேயே செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் புதிய காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் கூடியது. 
இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். ஆனால், பிரியங்கா தலைவராக விரும்பவில்லை என்று நழுவிவிட்டார். ஜோதிராதித்யா சிந்தியா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கட்டப்போதும், செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கவில்லை.

 Why sonia gandhi accepted for congress president post?
தலைவரை தேர்வு செய்வதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் தவித்த வேளையில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த  தலைவர்கள் சோனியாவை பொறுப்பை ஏற்கும்படி வற்புத்தியதகாகக் கூறப்படுகிறது. கடந்த 1998-ம் ஆண்டில் இக்கட்டாண வேளையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா முன்வந்ததைப்போல இப்போதும் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் நேரு குடும்பத்தைச் சாராதவர்கள் தலைவரானால், கட்சி பிளவுப்படும் என்றும் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள், பல்வேறு மாநிலங்களில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவுவதையும் இவர்கள் கோடிட்டு சோனியாவிடம் பேசியதாகக் கூறாப்படுகிறது. இதனையடுத்து வேறு வழியின்றி சோனியா காந்தி காங்கிரஸின் இடைக்கால தலைவராக ஒப்புதல் அளித்தார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Why sonia gandhi accepted for congress president post?
வட மாநிலங்களில் அடுத்தடுத்து 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளன. அதைக் கருத்தில் கொண்டும் சோனியா இடைக்கால தலைவராக சம்மதித்தாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 19 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ள சோனியா, வெற்றி, தோல்வி என இரண்டையும் எதிர்கொண்டுள்ளார். இரண்டிலுமே சோனியாவுக்கு அனுபவம் உள்ளதால், தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் தலைவரானன் மூலம் கட்சி மீண்டு வரும் என்று மூத்த தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 
சோனியா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றிருந்தாலும். அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இடைக்கால தலைவரைத் தேர்வு செய்யவே காங்கிரஸ் கட்சி திணறிவிட்டது. தலைவராக ராகுல் மீண்டும் முன் வந்தாலோ அல்லது பிரியங்கா தலைவராக முன்வரும்வரை சோனியாவே பதவியில் நீடிப்பார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் இப்போதே பேச்சு அடிபடுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios