Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்? விளக்கமளிக்கும் வித்யாசாகர் ராவ்...

Why not call Sasikala to rule Explanatory Vidyasagar Rao
Why not call Sasikala to rule Explanatory Vidyasagar Rao
Author
First Published Oct 17, 2017, 6:36 PM IST


தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்தபோது பெற்ற அனுபவங்கள் குறித்து  வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகத்தில் சசிகலாவை  ஏன் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்பது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

முக்கியமான அந்த நாட்கள் என்ற தலைப்பில் தனது ஓராண்டு தமிழக ஆளுநர் பதவிக்காலம் குறித்து வித்யாசாகர் ராவ் புத்தகம்ஒன்றைஎழுதியுள்ளார். அதை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  பெற்றுக்கொண்டார்.

கவர்னர் மாளிகை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம் மொத்தம் 12 அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்திலும்ஒவ்வொரு சம்பவத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளார். முதல் 3 அத்தியாயங்களில் ஜெயலலிதா பற்றி எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது பற்றியும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது பற்றிய தகவல்கள்விரிவாக உள்ளன. ஜெயலலிதா உடல்நிலை பற்றிய விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்தபோது ஏற்பட்ட பரபரப்பு பற்றி விவரித்துள்ள வித்யாசாகர் ராவ் தமிழக மக்கள் அமைதியான முறையில்நடந்து கொண்டதை சுட்டிக் காட்டியுள்ளார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது பற்றி எழுதியுள்ளார்.

நான்காவது அத்தியாயத்தில் சென்னையை வார்தா புயல் உலுக்கியது பற்றி குறிப்பிட்டுள்ளார். வார்தா புயல் பாதிப்பில் இருந்து மீள தான்எடுத்த நடவடிக்கைகளையும் சுட்டி 

காட்டியுள்ளார்.

5-வது அத்தியாயத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி சென்னை மெரினா உள்பட தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள்நடத்திய போராட்டம் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

6வது  அத்தியாயத்தில்  ஓ.பன்னீர்செல்வம்  ராஜினாமா மற்றும்  ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரி இருந்தது பற்றிய தகவல்களைமிகவும் விறுவிறுப்புடன்  வித்யாசாகர் ராவ் எழுதியிருக்கிறார்.

அடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்தது, சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து  தனது புத்தகத்தில் எழுதியுள்ள வித்யாசாகர் ராவ், அந்த சமயத்தில்  சசிகலாவை  அழைக்காதது ஏன்?என்பது பற்றியும் எழுதியுள்ளார்.

அதில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் தான் அவசரப்படவில்லை என்றும்,  சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைநடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியிட இருந்ததால் அதுவரை காத்திருக்க முடிவு செய்ததாகவும், அந்தமுடிவின்படி அடிப்படையில் செயல்பட்டதால் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என வித்யா சாகர் ராவ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios