‘தன்னால் சப்ளை செய்யப்பட்ட பெண்கள் 130 பேரில் 63 பேர் கவர்னர் ’சம்பந்தப்பட்ட’ அனைத்து உண்மைகளையும் சொல்லத்தயாராக இருந்தார்கள் என்ற நிர்மலாதேவியின் பகீர் வாக்குமூலத்தை வெளியிட்டதே நக்கீரன் கோபாலின் அதிரடி கைதுக்குக் காரணம் என்று தெரிகிறது.

அந்த ‘நக்கீரன்’ இதழில் இடம் பெற்றிருக்கும் சூடான செய்திகள் வருமாறு;

சுவாதி கொலைவழக்கில் ராம்குமாரின் கதையை சிறையிலேயே முடித்தது போல நிர்மலாதேவியின் கதையை முடிக்க நினைப்பதாக சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள் சொல்கிறார்களாம்.

மனிதமேம்பாட்டுத்துறை அதிகாரி கலைச்செல்வன், மதுரைக்காமராஜர் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் சின்னையா, துணைவேந்தர் செல்லத்துரை, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் ஆகியோருக்கு நிர்மலாதேவி விவகாரத்தில் எவ்வளவு நெருக்கமான பங்கு இருந்ததை என்பதைப் புட்டுவைக்கும் அந்தச்செய்தியில் கவர்னரிடம் நிர்மலாதேவி எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதை அவரது வாக்குமூலமாகவே வெளியிட்டிருக்கிறார்கள்.

‘இந்த வழக்கை முருகன், கருப்பசாமி மற்றும் என்னோடு முடித்துக்கொள்ளப்பார்க்கிறார்கள். அப்படி முடித்துக்கொள்வதால் என்னை துணைவேந்தராக்குவதாக ஆசை வார்த்தை வலையில் வீழ்த்திய அத்தனை பேரும் தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஒன்று எந்த உண்மையும் வாழ்நாள் முழுக்க நான் சிறையில் இருக்கவேண்டும். அல்லது சிறையிலேயே என்னைக் கொலை செய்துவிடவேண்டும் என்பதுதான் சம்பந்தப்பட்டவர்களின் நோக்கமாக இருக்கிறது.

‘கவர்னர் மதுரைக்கு அருகே நிகழ்ச்சிக்கு வரும்போதெல்லாம் அவரது செயலாளர் ராஜகோபால் மூலம் தனியே கவர்னரை சந்தித்தித்திருக்கிறேன்.

ராஜகோபாலுக்கு சுமார் 130 பெண்கள் வரை சப்ளை செய்திருக்கிறேன். ராஜகோபால் அடிக்கடி புதுமுகங்கள் தான் கேட்பார். அப்படிக் கேட்கும்போதெல்லாம் வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்பி சப்ளை செய்திருக்கிறேன்.

துணைவேந்தருக்கான தேர்வு கமிட்டி மூலம் என்னைத் தேர்வு செய்ய கவர்னரை சந்திக்க ராஜகோபால் ஏற்பாடு செய்தார். அந்த சந்திப்பில் கவர்னருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. அப்படி நான் கவர்னரை சந்தித்தது மதுரை மாவட்ட அமைச்சர்கள் உட்பட அ.தி.மு.க.வினர் பலபேருக்குத் தெரியும். அவர்களில் யாரோதான் நான் வாட்ஸ் அப்பில் பேசியதை அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பிவிட்டார்கள்.

இப்போது பிரச்சினையே பாதிக்கப்பட்ட பெண்கள் 130 பேரில் 63 பேர் சம்பந்தப்பட்டவர்களை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். இதை கவர்னர் அலுவலகமும் முதல்வர் அலுவலகமும் மூடி மறைத்து என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்’ என்று கவர்னரின் அடிமடியில் கைவைக்கிறது நக்கீரனின் கவர் ஸ்டோரி.

இதற்கு மேல் கவர்னருக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. 

1. நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று நாற்காலியை விட்டு இறங்குவது.

2. பொய்ச்செய்திகள் வெளியிட்டோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளுவது. 

ஸோ நியாயமாக என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்திருக்கிறார் கவர்னர்.