திமுக அரசு ஏன் இப்படி குழம்பி தடுமாறுகிறது? ஆளுங்கட்சியை விடாமல் விரட்டும் டிடிவி.தினகரன்..!
சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே இதுவரை 82% பணிகள்தான் நிறைவடைந்திருக்கின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே?! மே 31-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்ட பணிகளை அவசர கதியில் ஒன்றிரண்டு நாட்களுக்குள் முடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும்போது அவை தரமானதாக இருக்குமா?

கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டிருப்பது இந்த பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தாதா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையிலும் கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெறுகிற சூழலிலும் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டிருப்பது இந்த பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தாதா?
சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே இதுவரை 82% பணிகள்தான் நிறைவடைந்திருக்கின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே?! மே 31-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்ட பணிகளை அவசர கதியில் ஒன்றிரண்டு நாட்களுக்குள் முடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும்போது அவை தரமானதாக இருக்குமா?
மக்கள் பணம் விரயமாகும்தானே?! விவசாயத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் கிடைப்பது நல்லதுதான் என்றாலும் அதற்கேற்ப மற்ற பணிகளை திட்டமிட்டிருக்க வேண்டுமல்லவா? ஏதோ வரலாற்றுச் சாதனை புரிவதாக நினைத்துக்கொண்டு, நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் செயல்படலாமா? தி.மு.க அரசு ஏன் இப்படி குழம்பி தடுமாறுகிறது? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.