விருது வழங்கும் விழாவில் கோயில்களை பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு இவ்வளவு எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பும் என சிவகுமார் குடும்பத்தினரே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

 

இந்நிலையில் ஜோதிகா, அந்த விருது வழங்கும் விழா குறித்த ப்ரமோசன் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதற்கு கீழ் ஜோதிகாவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில், ‘’ஜோதிகாவிற்கு, உங்கள் மீது நாங்கள் இந்துக்கள் அளவற்ற மரியாதை வைத்திருந்தோம்... ஆனால், நீங்களோ பொதுமேடையில் எங்களின் கலாச்சாரத்தை அர்த்தமற்றதாக விமர்சித்து பேசி உள்ளீர்கள். உங்கள் மீதான எங்களின் நல் அபிப்பிராயம் தவறானது என்று எங்களுக்கு உணர்த்தியுள்ளீர்கள். மிகவும் நன்றி. ஆக இன்றுவரை நீங்கள் ஒரு இஸ்லாமிய மதவாதியாகவே இருக்கின்றீர்கள்.

ஜோதிகா அவர்களே, இந்து கோயில்களின் உண்டியல்களில் போடப்படும் காசுகளை இந்துக்கள் மட்டும் திண்கவில்லை, அரசுக்கு நேரடியாக போகிறது. அதில் அரசு எத்தனை மானியங்கள் வசதியுள்ளவர்க்கும் வசதியில்லாதவர்க்கும் கொடுக்கிறது தெரியுமா? சொல்லப்போனால் அரசிடம் இந்துக்களைத் தவிர்த்து அரசின் சலுகைகளை மற்ற மதத்தினர் நன்றாக அனுபவிக்கிறார்கள் தெரியுமா.? இந்துக்கள் கோயில் உண்டியல்களில் காசு போடுகிறார்கள். அதேபோல சர்ச்சிலும் மசூதியிலும் போடச் சொல்லுங்க. அதை அரசு நலத்திட்ட உதவிகளுக்கு வழங்கச்சொல்லுங்க பார்ப்போம். தைரியமிருக்கா?  பெண்ணுக்கு நாவடக்கம் ரொம்ப முக்கியம். மைக் கிடைத்தால் கண்டதையும் பேசக்கூடாது. இது சிவன் பூமி என்பதால் பொறுமையாக போகிறோம். தேவையற்ற பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்.

பள்ளிகள், மருத்துவமனைகள் எல்லாத்தையும் மேம்படுத்தாதற்கு இத்தனை நாள் ஆண்ட ஊழல் திராவிட கட்சிகள்தான் காரணம் தெரியுமா மேடம்..? ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் அடையாள சின்னங்களை குறைகூறிய நீங்கள் அந்த திராவிட கட்சிகளையும் குறை கூறியிருந்தால் நல்லது. ஏன் பயமா..? அதவிடுங்கள்... ஹவாலா பணத்தில் ஊறும் ஜமாத்துகளையும், மதம்மாற்றம் செய்யும் கிருஸ்துவ தேவாலயங்களையும் குறை சொல்ல பயமா..?

வருடம் 200 தமிழ்படம் ரிலீஸ் ஆகிறது. தோராயமா நடிகர்கள் வாங்கும் சம்பளம் மட்டும் 2000 கோடிகள். ஏற்கனவே சகல சௌபாக்கியங்களுடன் வாழும் உங்களுக்கு எதற்கு அவ்வளவு சம்பளம்? அதை பாதியாக குறைத்தாலே 1000 பள்ளிகள் கட்டலாம். அப்புறம் தியேட்டர்கள் 1000 இருக்கும். அவைகளை எல்லாம் பள்ளிகளாக மாற்றலாம். இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்கள் ஆன்லைனில் படம் பார்க்கும்போது தியேட்டர்கள் எதற்கு ? இவையெல்லாம் நீங்கள் இருக்கும் துறையிலேயே மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள். அதை முதலில் செய்துவிட்டு மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயங்கள் பக்கம் வாருங்கள்.

சினிமா படம் எடுக்க எதற்கு நூறு கோடி இருநூறு கோடி செலவில் படம் எடுக்க வேண்டும்? அந்த பணத்தை ஆஸ்பிட்டல் பள்ளிகள் கட்டலாமே? கோயில் மட்டும்தான் உங்களுக்கு தெரியுதா? அதுவும் இந்து கோயில் மட்டும்தான் தெரியுமா? ஏன் முஸ்லிம் கிருஸ்டின் கோயில் எல்லாம் தெரியாதா?

ஆயிரம் வருடம் கடந்தும் தமிழன் கட்டட கலையை தரணி முழுவதும் எடுத்து காட்டுவதோடு இன்றும் இந்துமதத்தின் அசைக்க முடியாத அடையாளமாக இருக்கும் தஞ்சை பெரிய கோயில் பெரியார் பேரன், பேத்திகளின் கண்ணை உறுத்தி கொண்டு உள்ளது என்பதும் அந்நிய சக்திகள் அந்த புகழை அவமதிக்க துடிப்பதும் அப்பட்டாமாக தெரிகிறது. உண்மைகள் ஒரு போதும் அழியாது என்பது ஊதாரிகளுக்கு தெரிய வாய்பில்லை. நாய்கள் குரைப்பதால் சூரியன் சுருங்காது. தங்கம் தகரமாகது’’ என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.