உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே. 

அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.

*    ”காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. எதுவுமே செய்யவில்லை! என்று கூற தி.மு.க.விற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வளவு சிக்கல்களுக்கும் தி.மு.க.தான் காரணம்.”
-    மா.ஃபா.பாண்டியராஜன். 

*    ஒரு திட்டரில் ஆயிரம் பேர் பார்த்த படத்தை இப்போது இருநூறு பேர்தான் பார்க்கின்றனர். அவர்களிடம் ஆயிரம் பேர் பார்க்கும் பணத்தை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

-    ஆர்.கே.செல்வமணி

*    ஸ்டெர்லைட் ஆலை குறித்த விவகாரத்தில், தமிழக மக்கள் பாதிக்கப்படாத வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த நிர்வாகம் ஒதுக்கியுள்ள, நூறு கோடி ரூபாய் நிதியிலிருந்து மக்கள் பிரச்னை தீர்விற்காக முப்பத்தைந்து கோடி ரூபாய் பயன்படுத்தப்படும்.

-    கே.சி.கருப்பணன்

*    காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசை தமிழக அரசு எதிர்த்தால் மறுநாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது. 

-    துரைமுருகன்

*    தமிழகத்தின் உரிமையை, பி.ஜே.பி.தான் மீட்டெடுக்கும், என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். தமிழக அரசியலில் மற்றவர்கள் தொலைத்த உரிமையை நாங்கள் மீட்டெடுப்போம். 

-    தமிழிசை 

*    அ.தி.மு.க.வின் ஐம்பது எம்.பி.க்களும் ராஜினாமா செய்தால், நாங்களும் செய்ய தயார். அதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால், நாங்களும் அடுத்த நிமிஷமே செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இதற்கான தைரியமும், தெம்பும் அவர்களுக்கு இல்லை.

-    ஸ்டாலின் 

*    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இறுதி நாள் வரை காத்திருந்துவிட்டு, எங்கே தங்களது தலைக்கு ஆபத்து வந்துவிடுமோ! என மக்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரதம் நடத்துகிறது அ.தி.மு.க. இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

-    தினகரன்

*    டி.டி.வி. தினகரனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட தேவையேயில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் டி.டி.வி.தினகரன் என்ற பெயரே இன்றைய அரசியலில் இருந்திருக்காது. 

-    தீபா

*    எனக்கு எலிமருந்து அனுப்பியவர் தனது சுய விளம்பரத்துக்காக இப்படி செய்துள்ளார். அவர் மீது நான் புகார் செய்யவில்லை. 

-    மகேந்திரன் எம்.பி.

*    தமிழக அரசியலில் காலி இடம் இருக்கிறது! என்று சொல்லி சிலர் புறப்பட்டுள்ளனர். காலி இடமெல்லாம் எல்லாம் நிரப்பப்பட்டுள்ளது. அவர்கள் வேறு மாநிலம் சென்று பார்க்கலாம்.

-    எடப்பாடி பழனிசாமி.