சட்டசபையில் நேருக்கு நேர் ஜெயலலிதாவை எதிர்கொண்ட விஜயகாந்த்.! நாக்கை துருத்தியது ஏன்? எதற்காக?

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்த விஜயகாந்தும், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அப்போது தனது பாணியில் நாக்கை துருத்தி அதிமுகவினருக்கு விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்தது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வாகும்.
 

Why did Jayalalitha Vijayakanth clash in the Tamil Nadu Legislative Assembly KAK

திரைத்துறையில் சாதித்த விஜயகாந்த்

தமிழகத்தில் அதிமுக- திமுகவிற்கு மாற்றாக எந்த கட்சியும் இல்லாத நிலையில், தான் இருக்கிறேன் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவேன் என களத்தில் இறங்கியவர் தான் கேப்டன் விஜயகாந்த். தனது சொந்த உழைப்பால் பல கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு நல திட்டங்களை செயல்படுத்தியவர் விஜயகாந்த், விஜயகாந்தின் திருமண மண்டபத்திற்கு வந்தால் எந்த நேரமும் சாப்பாடு கிடைக்கும் என அனைவரும் சொல்வதுண்டு. அந்த அளவிற்கு மக்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் விஜயகாந்த்.

Why did Jayalalitha Vijayakanth clash in the Tamil Nadu Legislative Assembly KAK

அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த விஜயகாந்த்

திரைத்துறையில் சாதித்த விஜயகாந்த் அரசியலிலும் தனது முத்திரையை பதிக்க 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை துவக்கினார். இதனையடுத்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக, விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதனையடுத்து தனது அரசியல் பேச்சால் மக்களை கவர்ந்தவர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்தார். இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த் அழைக்கப்பட்டார். அப்போது 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.  

Why did Jayalalitha Vijayakanth clash in the Tamil Nadu Legislative Assembly KAK

ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் மோதல்

இதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் இரு தரப்புக்கும் மோதல் உருவானது. சட்டமன்ற தேர்தலில் தேமுதிகாவால் அதிமுக வெற்றி பெற்றதா.? அதிமுகவால் தேமுதிக வெற்றி பெற்றதா.? என்ற மோதல் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் பேசும் போது, பால் மற்றும் பேருந்து கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெயலலிதா பல முறை பதில் அளிக்கப்பட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே ஏன் விலை உயர்வை அறிவிக்கைவில்லையென கேள்வி எழுப்பினார். அப்போது ஜெயலலிதா சங்கரன்கோயில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெறும் என கூறினார். மேலும் தேர்தலில் தனித்து போட்டியிட உங்களுக்கு திராணி உள்ளதா.? என ஆவேசமாக பேசினார். 

 

நாக்கை துருத்திய விஜயகாந்த்

இதற்கு பதில் அளித்த விஜயகாந்த்  இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என கூறினார். இதன் காரணமாக இரு தரப்புக்கும் மோதல் வலுத்தது. அப்போது அதிமுகவினர் கூச்சல் எழுப்பியதால் ஆவேசமடைந்த விஜயகாந்த நாக்கை துருத்தி எச்சரித்தார். இதனையடுத்து சட்டமன்றத்தில் மோதல் வலுத்ததையடுத்து சட்டமன்றத்தில் இருந்து தேமுதிகவினர் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து பேசிய ஜெயலலிதா இனி தேமுதிகவிற்கு இறங்கு முகம் தான் என கடுமையாக விமர்சித்தார். இந்த மோதல் தான் இன்னும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவதாகும். 

இதையும் படியுங்கள்

Captain Vijayakanth: திமுக-அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த்.! கடந்து வந்த அரசியல் பாதை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios