Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் தெரியுமா ? புதிய சர்வே என்ன சொல்கிறது….

who win in karnataka election congress or BJP or Kumarasamy
who win in karnataka election congress or BJP or Kumarasamy
Author
First Published Apr 14, 2018, 11:55 AM IST


கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 120 முதல் 132 தொகுதிகளைக் கைப்பற்றி ஆண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்குகொள்ளும் என இந்தியா டுடே எடுத்துள்ள சர்வேயில் தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே  மாதம் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு ஆட்சியை பிடிப்பது யார் என்று இந்தியா டுடே சர்வே எடுத்து அதன் முடிவை  தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த சர்வேயின்படி காங்கிரஸ் கட்சி 120 முதல் 132 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது. பாஜகவிற்கு 60 முதல் 72 தொகுதிகள் கிடைக்கும் என்றும், ஜனதாதள கட்சிக்கு 24 முதல் 30 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

who win in karnataka election congress or BJP or Kumarasamy

காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் சித்தராமையா மீது அதிக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவர் மீண்டும் முதலமைச்சர்  ஆவாரா? என்ற சந்தேகமும் இருப்பதாக கர்நாடக மாநில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் எடுக்கப்பட்ட சர்வேயிலும் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிடைந்ததும் அடுத்த மூன்று நாட்களில் அதாவது மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், அப்போது யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios